உலகளவில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையின் ஒரு பகுதியாக இந்தியாவைச் சேர்ந்த கிரிப்டோ கரன்சி பிரமாற்ற நிறுவனமான வாசிர்எக்ஸ் நிறுவனம் தனது 40 % பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கியது.
இந்த நிறுவன பணியாளர்களுக்கு 45 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளித்து அந்த நிறுவனம் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளது.
பொருளாதார மந்த நிலையால் இந்தியாவில் கிரிப்டோ சந்தை வீழ்ச்சி அடைந்துள்ளது.
மேலும் இந்தியாவில் கிரிப்டோ கரன்சிக்கு அதிக வரி,வங்கிக்கணக்கை அனுகுவதில் சிக்கல் உள்ளிட்ட காரணங்கள் பிரதானமாக உள்ளன.
இதன் காரணமாக இந்தியாவில் கிரிப்டோ கரன்சி சந்தை வீழ்ச்சியை சந்தித்து உள்ளன.
இந்திய அளவில் கிரிப்டோ சந்தையில் முதலிடத்தில் இருந்தாலும் நிதி நிலையை சீராக்க சிக்கன நடவடிக்கையை எடுத்துள்ளதாக வாசிர்எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது