துவக்கத்தில் சரிவில் கிடந்த டிவிட்டர் நிறுவனம் பல ஆண்டுகளுக்கு பிறகு லாபத்தை பதிவு செய்து சற்று ஆஸ்வாசப்படுத்தியது. அதற்குள் அதனை வாங்க மஸ்க் ஆர்வம் காட்டினார். டிவிட்டரை மஸ்க் வாங்கிய சில மாதங்களில் அதாவது டிசம்பர் மாதத்தில் மட்டும் டிவிட்டரின் வருவாய் 40% சரிந்துள்ளது. இந்த தகவலை பிரபல வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை வெளியிட்டுள்ளது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் டிவிட்டரை மஸ்க் வாங்கிய நிலையில் அந்த நிறுவன பங்குகள் 71% சரிந்து பெரிய பாதிப்பை சந்தித்திருந்தன. டிவிட்டர் நிறுவனம் திவாலாக கூட வாய்ப்பிருப்பதாக எலான் மஸ்க் கடந்த நவம்பரிலேயே தெரிவித்திருந்தார். இந்த சூழலில் டிசம்பர் மாத வருவாய் சரிவு பெரிய தாக்கத்தை அந்நிறுவனத்தில் ஏற்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் கையில் இருந்து பெறப்படும் பணத்தின் மூலம் டிவிட்டர் நிறுவனம் வங்கிகளிடம் இருந்து வாங்கிய கடனின் முதல் தவணை மற்றும் அதற்கு உண்டான வட்டியை கடந்த ஜனவரி மாதம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது. ஜனவரி மாதம் எவ்வளவு வருவாய் வந்தது என்ற எதிர்பார்ப்பு டிவிட்டர் நிறுவனத்தை தொற்றிக் கொண்டுள்ளது. இந்தாண்டே டிவிட்டர் கடன்களை அடைத்துவிட்டு லாபத்தை பதிவு செய்ய வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் கணித்துள்ளனர். எவ்வளவு வேகம் நிதி நிலையில் கீழே விழுந்தாரோ அத்தனை வேகத்தில் எலான் மஸ்க் மீண்டும் மேலே கிளம்பி வந்துள்ளது உலகளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது.
டிவிட்டரின் வருவாய் இவ்வளவு சரிந்துவிட்டதா?
Date: