இந்தியா மட்டுமின்றி உலகளவில் கவனிக்கப்படும் நிறுவனமாக அதானி குழும நிறுவனங்கள் உள்ளன. இந்த சூழலில் ஹிண்டன்பர்க் என்ற நிறுவனம், அதானி குழுமம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அதானி நிறுவனம் பெரிய அளவில் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது. இந்த அறிக்கை வெளியான சில நிமிடங்களில் அதானி குழுமத்தின் பங்குகள் பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சியை சந்தித்தன. ஹிண்டன்பர்க் நிறுவன அறிக்கையை அதானி நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. அதானி குழுமத்தின் மீது திட்டமிட்டு பழி சுமத்தும் நடவடிக்கையை ஹிண்டன்பர்க் நிறுவனம் செய்து வருவதாகவும் அதானி குழுமம் விளக்கமளித்துள்ளது.ஆனால் 2 ஆண்டுகள் முழுமையாக ஆராய்ந்த பிறகே அதானி நிறுவனம் குறித்து புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் கூறியுள்ளது. பல தசாப்தங்களாக அதானி குழுமம் விதிகளை மீறியிருப்பதாக, ஹிண்டன்பர்க் அறிக்கை தெரிவிக்கிறது. அதானி குழுமம் மோசடி செய்துள்ள பணத்தின் மதிப்பு 17.8 டிரில்லியன் ரூபாய் என்றும் ஹிண்டன்பர்க் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. அதானி குழுமத்தின் மீது புகார் எழுந்ததை அடுத்து அந்த குழுமம் தொடர்பான நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு சுமார் 10 % வரை சரிந்தது. ஹிண்டன்பர்க்கின் ஒரே ஒரு ஆய்வறிக்கையால் அதானி குழுத்துக்கு 46 ஆயிரம் கோடி ரூபாய் சந்தை மூலதனம் காணாமல் போய்விட்டது. வரும் 27ம் தேதி அதானி குழுமம் 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள FPO அறிவிக்கப்பட்டிருந்த சூழலில் அந்த பங்குகளின் விலையும் கடுமையாக வீழ்ந்தன,ஜனவரி 31ம் தேதி வரை இந்த FPOவில் வாடிக்கையாளர்கள் பங்குகளை வாங்கிக்கொள்ள முடியும். நீங்க வாங்க போறீங்களா?