இந்திய பங்குச் சந்தைகள் கடந்த சில மாதங்களில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளன. BSE சென்செக்ஸ் மற்றும் NSE – நிஃப்டியுடன், தனிப்பட்ட பங்குகளும் அவற்றின் 52 வார உயர்வைத் தொட்டுள்ளன. கடுமையான பொருளாதார சூழலில் இது ஒரு வியப்புக்குரிய மாற்றம். பங்கு விலைகள் எவ்வளவு உயர்ந்துள்ளன. இந்தியாவில் பட்டியிலடப்பட்ட பெரும்பாலான பங்குகள் ஒரு யூனிட்டுக்கு ரூ.1,000 க்கும் குறைவான விலையில் பரிவர்த்தனையில் இருக்கும் சூழலில், ஒரு சில பங்குகள் மட்டும் பன்மடங்கு விலையில் வர்த்தகம் செய்கின்றன. இந்திய பங்குச் சந்தையில் அதிக விலை கொண்ட நிறுவனங்களின் பட்டியல் மற்றும் அவற்றைப் பற்றிய ஒரு அறிமுகம் கீழே.
MRF – (₹80,860) மெட்ராஸ் ரப்பர் தொழிற்சாலை (Madras Rubber Factory) இந்தியாவின் முன்னணி டயர் உற்பத்தி செய்யும் நிறுவனம். வாகனங்களுக்கான டயர்களை உற்பத்தி செய்வது மட்டுமன்றி சச்சின் டெண்டுல்கரின் கிரிக்கெட் மட்டையை நினைவுறுத்துவதாக இருக்கிறது. எம்.ஆர்.எஃப் பற்றிய ஒரு சுவாரசியமான தகவல் என்னவென்றால், அது உண்மையில் பழைய சென்னையில் இருந்த கே.எம். மம்மென் மாப்பிள்ளை நிறுவனத்தின் பின்புறத்தில் ஒரு சிறிய கொட்டகையில் பொம்மை உற்பத்தி செய்யும் நிறுவனமாகத் துவங்கியது.
டயர் உற்பத்தி மட்டுமில்லாமல், வண்ணப்பூச்சுகள், விளையாட்டு பொருட்கள் மற்றும் புகழ்பெற்ற பொம்மை பிராண்ட் ஆன ‘ஃபன்ஸ்கூல்’ ஆகியவற்றையும் தயாரிக்கிறது. MRF பட்டியலிடப்பட்ட பிறகு அதன் பங்கை ஒரு போதும் பிரிக்கவோ, பிளவுபடுத்தவோ இல்லை. நிறுவனத்தின் பங்குகள் இன்னும் துவக்க கால மதிப்பான ₹10 முக மதிப்பை மட்டுமே கொண்டுள்ளன. நிறுவனத்தின் பங்கு நவம்பர் 2012 இல் ₹10,000 விலை கொண்டதாக இருந்தது, பிப்ரவரி 2021 இல் உச்சபட்சமாக ₹98,575 ஐ எட்டியது. கடந்த ஓராண்டில் மட்டும் MRF பங்கின் விலை 25.3% உயர்ந்துள்ளது.
ஸ்ரீ சிமெண்ட்ஸ் – Shree Cements (₹29,781) – ஸ்ரீ சிமெண்ட்ஸ், இந்தியாவில் மிகப்பெரிய சிமெண்ட் உற்பத்தி செய்யும் நிறுவனமாகும். இது 1979 ஆம் ஆண்டில் பட்டியிலடப்பட்டு இரண்டு பங்குச் சந்தையிலும் இணைக்கப்பட்டது. இந்த நிறுவனம் உள்ளார்ந்த வளர்ச்சியையும், புறநிலை வளர்ச்சியையும் அடைந்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில், ஸ்ரீ சிமெண்ட்ஸ் பங்கு விலையானது மிகப்பெரிய அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. ஸ்ரீ ஜங் ரோதக் (Shree Jung Rodhak), பங்கூர் சிமெண்ட் (Bangur Cement), ராக்ஸ்ட்ராங் சிமெண்ட் (Rockstrong Cement) ஆகியவை அதன் சில புகழ்பெற்ற அதிக வர்த்தகமாகும் பிராண்டுகளில் அடங்கும். நிறுவனத்தின் தற்போதைய சந்தை மூலதனம் ₹1 ட்ரில்லியன் அளவில் உள்ளது. கடந்த ஒரு வருடத்தில், நிறுவனத்தின் பங்கு விலை 26.5% வருவாயை அதன் முதலீட்டாளர்களுக்கு அளித்துள்ளது.
ஹனிவெல் ஆட்டோமேஷன் – Honeywell Automation – (₹40,250) – ஹனிவெல் ஆட்டோமேஷன், இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அமெரிக்காவின் ஹனிவெல் குழுமத்தின் ஒரு பகுதியான இந்த நிறுவனம், ஒருங்கிணைந்த தானியங்கு தொழில் நுட்பத்திலும், மென்பொருள் தொடர்பான தீர்வுகளை வழங்குவதிலும் உலகின் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது. இது சுற்றுச்சூழல் மற்றும் எரிபொருள் கட்டுப்பாட்டுக் கருவிகள், சென்சார் எனப்படும் உணர் கருவிகள் மற்றும் கட்டுப்பாட்டுக் கருவிகள் போன்றவற்றில் பரந்த அளவில் தயாரிப்பு செய்யும் portfolio-வை கொண்டுள்ளது.
இந்த நிறுவனம் 1987 ஆம் ஆண்டில் டாடா குழுமம் மற்றும் அமெரிக்காவில் உள்ள ஹனிவெல் தலைமை நிறுவனத்திற்கு இடையிலான ஒரு கூட்டு முயற்சியாகத் துவங்கப்பட்டது. முன்னதாக “டாடா ஹனிவெல்” என்ற பெயரில் அழைக்கப்பட்டது. 2004-ல் இந்த கூட்டு நிறுவன ஒப்பந்தங்கள் முடிவுக்கு வந்தது. இந்த பங்கு அதன் 52 வார உச்ச விலையான ₹49,805 ஐ, 15 மார்ச் 2021 அன்று தொட்டது. ஒருங்கிணைந்த தானியங்கு தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் தீர்வு நிறுவனங்களின் சந்தை மூலதனம் ₹355.9 பில்லியன் ஆகும். இந்த பங்கு கடந்த 5 ஆண்டுகளில் 400% க்கும் அதிகமான வருவாயை அதன் முதலீட்டாளர்களுக்கு அளித்துள்ளது.
3M இந்தியா – 3M INDIA (₹25,108) – 3M இந்தியா, இந்தியாவில் 1987 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதன் வணிகம் பல்வேறு பிரிவுகளில் பரந்து காணப்படுகிறது. இந்தியாவில் நன்கு அறிமுகமான அதன் சில தயாரிப்புகளான ஸ்காட்ச் பிரைட், ஸ்காட்ச் டேப்புகள், போஸ்ட் இட்ஸ், ஸ்காட்ச்கார்ட் பசை மற்றும் பிசின்கள், பெயிண்ட் பாதுகாப்புத் தாள், ஜன்னல் பாதுகாப்புத் தாள், குறியீடுகள், பல் மருத்துவப் பொருட்கள், அறுவை சிகிச்சை மருத்துவ பொருட்கள் போன்றவையாகும். 3M நிறுவனத்தின் பலதரப்பட்ட தயாரிப்புகள் இதன் பன்முகத்தன்மை கொண்ட அதன் சந்தையை எதிரொலிக்கும் சான்றாகும். நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு ₹282.8 பில்லியன் ஆகும். கடந்த 5 ஆண்டுகளில், நிறுவனம் 107% முதலீட்டாளர்களுக்குத் திரும்ப வழங்கியுள்ளது.
பேஜ் இண்டஸ்ட்ரீஸ் – Page Industries – (₹29,686) பேஜ் இண்டஸ்ட்ரீஸ் என்பது இந்தியா, பங்களாதேஷ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இலங்கை மற்றும் நேபாளத்தில் ஜாக்கி தயாரிப்புகளை உற்பத்தி செய்யவும், விநியோகிக்கவும் உரிமம் பெற்ற ஒரு பட்டியலிடப்பட்ட நிறுவனமாகும். ஜாக்கி இன்டர்நேஷனல் தயாரிப்புகள் மட்டுமின்றி ஸ்பீடோ இன்டர்நேஷனலின் தயாரிப்புகளுக்கான பிரத்யேக உரிமத்தையும் பேஜ் இண்டஸ்ட்ரீஸ் பெற்றுள்ளது. இந்த பங்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு பன்முக வருமானம் கொண்ட பங்காக மாறிவிட்டது. கடந்த பத்து ஆண்டுகளில் 1,600 % க்கும் அதிகமான வருமானத்தை முதலீட்டாளர்களுக்கு வழங்கியுள்ளது. பங்குகளின் சந்தை மூலதன மதிப்பு ₹331.6 பில்லியன் ஆகும். எனினும், இது தொழில் P/E குறியீடான 195.5 மதிப்பிலிருந்து குறைவாக உள்ள 97.4 P/E இல் வர்த்தகம் செய்யப்படுகிறது.
நெஸ்லே இந்தியா – NESTLE INDIA – (₹17,500) – இந்தியாவுடனான நெஸ்லேவின் தொடர்பு 1900 களின் துவக்கத்தில், இந்திய சந்தைக்கு அதன் தயாரிப்புகளை அனுப்பத் துவங்கிய போது துவங்கியது, ஆனாலும், நெஸ்லேவின் முதல் தொழிற்சாலை 1961 இல் தான் துவங்கப்பட்டது. இன்று இந்தியாவின் உணவு பிரிவில் ஒரு தனித்துவமான தொடர்பையும், நம்பிக்கையையும் கொண்டுள்ளது. நெஸ்லேவின் தயாரிப்புகளில் சில புகழ்பெற்ற பிராண்ட்கள் உண்டு. மேகி (Maggi) வரம்பில் நூடுல்ஸ், சாஸ் மற்றும் மசாலாக்களும், பால் பொருட்கள் மிலோ (Milo), சன்ரைஸ் காபி போன்றவையும் அடங்கும். நெஸ்லே இந்தியா மிகவும் புகழ்பெற்ற சாக்லேட் பிராண்டுகளான மன்ச் (Munch), பார் ஒன்(Bar One) ( , மில்க்கி பார்(Milky Bar) மற்றும் கிட்கேட் (Kit Kat) போன்றவற்றை வைத்திருக்கிறது, இந்த பங்கு தற்போது 77.7 P/E இல் வர்த்தகம் செய்யப்பட்டு, ₹1.7 டன் சந்தை மூலதன மதிப்புக் கொண்டதாக உள்ளது. கடந்த ஒரு வருடத்தில், நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் பங்கு விலை 5.8% உயர்ந்துள்ளது.
Sir,
I am a regular follower of your talk, I am beginner in Equity and mutual fund, Based on your suggestion I started SIP a few months before, it gives good returns, Thank you, sir,
kindly share your knowledge on how to analyze shares, and tell me in detail about small-cap, midcap shares for longtime holding
Sorry sir I am not able to read your three-book, I like to learn through your videos and audio,
Hi Suresh,
Please do share your mobile number so that we can contact you.
Money Pechu Team
Good morning Anaand sir,
Please post a blog for personal finance
And weeekly monthly yearly budget.
By
Jacob
Manapparai
We recommend to suggest less cost stocks than it.
Sir, i am followers you speech, what about yes bank. Future of the yes bank and can i invest in yes bank
Anand sir!
Welcome to the new website. I appreciate your efforts
The information about personal wealth management tips is really great. It helps a lot like me to forward looking in to my financial stability. That too during this pandemic time how to stay invest. I remember the quote I am not sure where I read “when there is a blood in streets stay invest” I know it’s awkward but investment perspective it’s really a great stance I would say.
I suggested to my wife about Moneypechu channel and she really coping up. she took the personal finance very seriously and
I will so beneficial if you can recommend some small stocks either for people like us who are interested in stock markets
Hi Simbu,
Please do share your mobile number so that we can contact you.
Money Pechu Team