தமிழ்நாடு பட்ஜெட் 2021-2022: எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமா?

Date:

உரையை முடித்துக்கொண்ட PTR! இன்றைய பட்ஜெட்டின் அம்சங்களை கீழே காணலாம்!

சற்றுமுன் வந்த தகவல்:

  • அதிமுக அரசின் பயிர்க்கடன் தள்ளுபடியால் பல்வேறு குழப்பம் மற்றும் குளறுபடிகள், முறைகேடுகள் குறித்து முறையாக ஆராய்ந்து பின்னர் கடன் ரத்து செயல்படுத்தப்படும்
  • தொழில் வளர்ச்சிக்கு முக்கிய திட்டங்கள்
  • 28 ஆயிரம் கோடி வரியை வசூலிக்க சமாதான் திட்டம் செயல்படுத்தப்படும்
  • தகுதி வாய்ந்த குடும்பங்களை கண்டறிந்த பிறகே 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்
  • மொத்த வருவாய் மதிப்பீடு – 2,60,409.26 கோடி
  • நடப்பு நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை – 58,692 கோடி
  • பெட்ரோல் விலை குறைப்பால் 1160 கோடி ரூபாய் வருவாய் இழப்பு
  • தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைகிறது.
  • மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட 2756 கோடி கடன் தள்ளுபடி
  • குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ₹1000 வழங்கும் திட்டத்தின் நோக்கம் இல்லத்தரசிகளுக்கு நிதியுதவி வழங்கவே; இதற்காக குடும்ப தலைவரின் பெயரை மாற்றத் தேவையில்லை
  • அரசு ஊழியர்களுக்கு, 1/4/2022 முதல் உயரத்தப்பட்ட அகவிலைப்படி வழங்கப்படும்
  • இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டிற்கு 225 கோடி
  • அனைத்து தொகுதிகளிலும் ₹3 கோடியில் விளையாட்டு அரங்கங்கள்
  • மசூதி, தேவாலயங்களை புதுப்பிக்க தலா 6 கோடி
  • சத்துணவு திட்டத்திற்கு 1725 கோடி
  • ஆதிதிராவிடர் பழங்குடியினர் மேம்பாட்டு கூறுகளுக்கு 14,696 கோடி
  • வெளிநாட்டு கல்வி உதவித்தொகை திட்டம் திருத்தப்படும்
  • எம்.ஜி.ஆர் மதிய உணவு திட்டத்திற்கு ₹1,725 கோடி ஒதுக்கீடு
  • அங்கன்வாடி மையங்களின் தரத்தை உயர்த்த 48 கோடி ஒதுக்கப்படும்
  • திருநங்கைகள் பயன்பெறும் வகையில் ஓய்வூதிய திட்டத்திற்காக ₹1.50 கோடி ஒதுக்கப்படும்
  • மகளிர் கல்வி முன்னேற்றத்திற்கான திட்டங்களுக்கு 762 கோடி ஒதுக்கப்படும்.
  • 300 சுற்றுலாத்தளங்கள் மேம்படுத்தப்படும்
  • 100 கோவில்களில் 100 கோடி செலவில், தேர் குளம் சீரமைக்கப்படும்
  • போதிய நிதி வசதி இல்லாத 12,959 திருக்கோயில்களில் பூஜை திட்டத்தை செயல்படுத்த ₹130 கோடி நிதி வழங்கப்படும்
  • சுற்றுசூழலை பாதுகாக்க சுரங்க கொள்கை உருவாக்கப்படும்
  • இலவச வேட்டி சேலை திட்டத்திற்கு 490 கோடி
  • திருவள்ளூர் மாவட்டத்தில் மின் வாகன உற்பத்திப் பூங்கா உருவாக்கப்படும்.
  • மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும்
  • விழுப்புரம், வேலூர், திருப்பூர் மற்றும் தூத்துக்குடியில் டைடல் பார்க் உருவாக்கப்படும்
  • கோவையில் ராணுவ தளவாட உற்பத்தி பூங்காஅமைக்கப்படும்
  • திருவண்ணாமலை, தர்மபுரி, நெல்லை, விருதுநகர், சிவகங்கை, விழுப்புரம், நாமக்கல், தேனி மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும்
  • காஞ்சிபுரத்தில் மருத்துவ சாதனங்கள் பூங்கா அமைக்கப்படும்
  • தூத்துக்குடியில் தொழில்துறை அலகுகளுக்காக 60 எம்.எல்.டி கடல்நீர் குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்
  • சென்னை நந்தம்பாக்கத்தில் நிதி நுட்பபப் பூங்கா உருவாக்கப்படும்
  • 4500 கோடியில் தூத்துக்குடியில் அறைகலன் (furniture ) தயாரிப்பு பூங்கா உருவாக்கப்படும்
  • நெய்வேலி நிலக்கரி நிறுவனத்துடன் இணைந்து புதிய தொழிற்பயிற்சி நிலையம் அமைக்கப்படும்
  • தொழில் துறையில் பின்தங்கிய மாவட்டங்களை மையமாகக் கொண்டு அடுத்த 5 ஆண்டுகளில் மொத்தம் 45 ஆயிரம் ஏக்கர் அளவிலான நில வங்கித் தொகுப்புகள் உருவாக்கப்படும்
  • தமிழ்நாட்டுக்கு என புது தொழில் கொள்கை உருவாக்கப்படும்
  • அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்துக்கான மானியம் 215 கோடி
  • மக்கள் நல்வாழ்வு துறைக்கு 18,933 கோடி
  • தமிழ்நாடு சித்தா பல்கலைக்கழகம் அமைக்கப்படும்
  • மகளிர் மருத்துவ காப்பீட்டிற்கு 1046 கோடி ஒதுக்கீடு
  • முத்துலட்சுமி மகப்பேரு நிதி உதவி திட்டத்திற்கு 959 கோடி
  • இலவச ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கை 1303 ஆக உயர்த்தப்படும்
  • அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து தமிழ்நாடு ஆளில்லா விமானக்கழகம் உருவாக்கப்படும்
  • உயர் கல்விக்காக ₹5,369.09 கோடி ஒதுக்கீடு
  • பள்ளிகளை விரைவாக திறக்க ஆசிரியர்களுக்கு தடுப்பூசி
  • 2,200 கி.மீ. சாலைகள் அகலப்படுத்தப்படும்!
  • உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதம் அகில இந்திய அளவில் 27.1% ஆக இருக்கிறது, தமிழ்நாட்டில் 51.4% ஆக உள்ளது; 17 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் என்ற விகிதத்தையும் கொண்டு நாட்டிலேயே தமிழ்நாடு முன்னணியில் உள்ளது
  • புதிதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இந்த ஆண்டு தொடங்கப்படும்
  • 865 மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் ₹20 கோடியில் ஸ்மார்ட் வகுப்புகள் உருவாக்கப்படும்
  • மெட்ரோ ரயில் 2, 2026-க்குள் முடிக்கப்படும்
  • 8 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு, கணித அறிவை உறுதி செய்ய 66.7 கோடி மதிப்பீட்டில், எண்ணும் எழுத்தும் இயக்கம் தீவிரமாக செயல்படுத்தப்படும்
  • பள்ளிக்கல்வித்துறைக்கு 32,599 கோடி
  • மாநில கல்வி கொள்கையை உருவாக்க புது குழு அமைக்கப்படும்
  • இலவச மின்சாரம் வழங்க, 19872 கோடி
  • மகளிர் பேருந்தில் இலவசமாக பயணிக்க 750 கோடி டீசல் மானியம் வழங்கப்படும்
  • மின்வாரிய நிறுவனங்கள் காப்பாற்றப்படும்
  • தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என்ற கூற்று தவறானது – ஏறத்தாழ 2,500 மெகாவாட் மின்சாரத்தை மின் சந்தைகளில் இருந்து வாங்கியே அரசு சமாளிக்கிறது
  • சென்னை விமான நிலையத்தில் இருந்து தாம்பரம் வழியாக கேளம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்கும் பணி விரைவாக தொடங்கப்படும்
  • மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை அமைப்பதற்கான விரிவான சாத்தியக்கூறுகளை ஆராய அறிக்கை தயார் செய்யப்படும்
  • 1000 புதிய பேருந்துகள் வாங்க ₹623.59 கோடி நிதி ஒதுக்கீடு
  • GST சாலை, 8 வழி சாலையாக மேம்படுத்தப்படும், மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்
  • நெடுஞ்சாலைத்துறைக்கு 17,899 கோடி
  • புதிதாக பெருநகர வளர்ச்சி குழுமங்கள் மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் வேகமாக வளர்ந்து வரும் ஓசூரில் ஏற்படுத்தப்படும்
  • 10 ஆண்டுகளில் குடிசைகள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க அரசு உறுதியேற்றுள்ளது
  • தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்கு ₹3,954 கோடி ஒதுக்கீடு
  • நகரங்களில் 30 மீட்டர் இடைவெளியில் தெருவிளக்கு அமைக்கப்படும்
  • சென்னையில் 3 இடங்களில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு 2056 கோடி
  • சென்னையில் 3 புதிய மேம்பாலங்கள், 335 கோடி செலவில் அமைக்கப்படும்
  • கொசஸ்தலை ஆற்றில் வெள்ள நீர் வடிகால் ஏற்படுத்த ₹87 கோடி செலவில் திட்டம்
  • சீர்மிகு நகரங்கள் திட்டத்திற்கு 2350 கோடி
  • கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் – 1000 கோடி
  • சிங்கார சென்னை 2.0 திட்டம் செயல்படுத்தப்படும் – சென்னையில் பொதுஇடங்களில் சுவரொட்டிகள் இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்
  • நகர்ப்புறங்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்தும் வகையில் நடைபாதைகள் மேம்படுத்தப்படும்
  • திருச்சியில் புதிய பேருந்து நிலையம், வணிகவளாகம் அமைக்கப்படும்
  • காசிமேடு மீன்பிடி துறைமுகம் ₹150 கோடி செலவில் மேம்படுத்தப்படும்
  • நமக்கு நாமே திட்டத்திற்கு 100 கோடி
  • கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ₹1200 கோடி மதிப்பீட்டில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம்
  • மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 20,000 கோடி கடன் உறுதி செய்யப்படும்
  • ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 27 நகரங்களில் பாதாள சாக்கடை திட்டங்கள் செயல்படுத்தப்படும்
  • ஊரக வேலை உறுதி திட்டத்திற்கான ஊதியம் 300 ரூபாயாக அதிகரிப்பு
  • கிராமப்புறங்களில் 1.27 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு
  • சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு நிதி ₹3 கோடி மீண்டும் அளிக்கப்படும்
  • தூய்மை பாரத இயக்கத்துக்கு 400 கோடி ஒதுக்கீடு
  • 2,89,877 வீடுகள் கட்ட 8,017 கோடி ஒதுக்கீடு!
  • ஜல்ஜீவன் திட்டத்தை செயல்படுத்த 2000 கோடி
  • பருவநிலை மாற்றம் இயக்கம் 500 கோடியில் உருவாக்கப்படும்
  • ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம் உருவாக்கப்படும் – இது இந்தியாவில் முதல்முறை

10 ஆண்டுகளுக்கு பிறகு, திமுக வின் முதல் பட்ஜெட். நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்ய உள்ளார். காகிதம் இல்லாதது சிறப்பு அம்சம் – பட்ஜெட்டுக்காக உறுப்பினர்கள் இருக்கை முன் கணினிகள் பொருத்தம். எதிர்பார்ப்புகள் ஏராளம்! ஆவலுடன் எதிர்பார்க்கும் மக்கள். எதிர்க்கட்சியினர் அம்பு எரிதலுக்கு தயார்!

  • சட்டப்பேரவைக்கு உறுப்பினர்கள் வரத்தொடங்கினர். பேரவை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது.
  • சற்று நேரத்தில் தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல்.
  • முன்னால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகை.
  • இன்று தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் செப்டம்பர் 21ம் தேதி வரை நடக்கிறது.
  • இ-பட்ஜெட் தாக்குவதற்கு முன் முதலமைச்சர் முக ஸ்டாலினிடமிருந்து வாழ்த்து பெற்றார் பழனிவேல் தியாகராஜன்.
  • தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் சபாநாயகர் மு அப்பாவு தலைமையில் தொடங்கியது.
  • PDF வடிவில் பட்ஜெட்.
  • பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை படிக்கத் தொடங்கியவுடன், அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டன.
  • நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அமளியை புறக்கணித்து, பட்ஜெட்டை தொடர்ந்து படித்துக்கொண்டு இருக்கிறார். பேச வாய்ப்பு கேட்ட அதிமுக உறுப்பினர்கள் முழக்கமிட்டு வெளிநடப்பு செய்தனர்.
  • பட்ஜெட் உரையை புறக்கணித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு
  • அரசின் நிதிநிலைமையை வலுப்படுத்தி கடன் சுமைகளை சரி செய்து நிதி நிலைமை சீரமைக்கப்படும் – நிதியமைச்சர்.
  • தேர்தல் வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் – நிதியமைச்சர்.
  • 6 மாதங்களில் தரமான அடித்தளம் அமைக்க பட்ஜெட் – PTR
  • ஒரே ஆண்டில் செய்து முடிக்க முடியாத அளவுக்கு நிலைமை கடுமையாக உள்ளது.
  • நிலைமையை சரிசெய்ய 3 ஆண்டுகள் ஆகும்.
  • ஒன்றிய அரசின் வரிமுறை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக உள்ளது.
  • வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் நாலை தாக்கப்படும்.
  • மாநில அரசின் நிதி, ஒன்றிய அரசால் திசை திருப்ப படுகிறது.
  • இந்த நிதியாண்டில், மீதமுள்ள 6 மாதங்களுக்கு மட்டுமே இந்த பட்ஜெட் பொருந்தும்.
  • பொது விநியோக திட்டத்தில் மின்னணு கொள்முதல் முறை உறுதியாக அமல்படுத்தப்படும்.
  • கூட்டாட்சி நிதி வடிவத்தை உறுதி செய்ய, தனி குழு அமைக்கப்படும்.
  • தேர்தல் வாக்குறுதிகளுக்கு முன்னுரிமை.
  • 2.05 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
  • அனைத்து துறை நடைமுறைகளும் கணினி மயமாக்கப்படும்.
  • 1921 ஆம் ஆண்டு முதலான சட்டமன்ற ஆவணங்கள் கணினிமயமாக்கப்படும்.
  • அரசின் நிதி சார்ந்த வழக்குகளை விசாரிக்க தனி அமைப்பு.
  • அரசு அலுவலகங்களில் தமிழ் ஆட்சி மொழியாக்கப்படும்.
  • தொல்லியல் ஆய்வுகளுக்கு 5 கோடி ஒதுக்கீடு.
  • கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
  • தமிழ் வளர்ச்சி துறைக்கு 80.26 கோடி ஒதுக்கீடு.
  • புறம்போக்கு, நீர் நிலைகளை பாதுகாக்க தொழில்நுட்பங்களை பயன்படுத்த திட்டம். நவீன நில ஆய்வுகள் மேற் கொள்ளப்படும்.
  • பேரிடர் மேலாண்மை – ஒருங்கிணைந்த அணுகுமுறை கடைபிடிக்கப்படும்
  • 2021-22 : 15வது நிதிக்குழு பரிந்துரைத்த 1,360 கொடி போதவில்லை : கூடுதல் நிதி கேட்டு மத்திய அரசை வலியுறுத்துவோம்.
  • காவல்துறைக்கு 8,930 கோடி ஒதுக்கீடு
  • காவல் துறையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்
  • தீயணைப்புத்துறைக்கு 405 கோடி
  • பொது விநியோக திட்டத்தில் உணவு மானியத்திற்கான ஒதுக்கீடு, 8437 கோடியாக உயர்வு
  • புதிய ரேஷன் கடைகள் அமைக்கப்படும்
  • மீன்வளர்த்துறைக்கு 1149 கோடி
  • 6 புதிய மீன்பிடித்தளங்கள் உருவாக்கப்படும், ஆய்வுக்கு மட்டும் 6.25 கோடி
  • நீர்ப்பாசனத்துறைக்கு 6607 கோடி
  • தமிழ்நாடு நீர்வள தகவல் மேலாண்மை அமைப்பு உருவாக்கப்படும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

Burberry is the First Brand to get an Apple Music Channel Line

Find people with high expectations and a low tolerance...

For Composer Drew Silva, Music is all About Embracing Life

Find people with high expectations and a low tolerance...

Pixar Brings it’s Animated Movies to Life with Studio Music

Find people with high expectations and a low tolerance...

Concert Shows Will Stream on Netflix, Amazon and Hulu this Year

Find people with high expectations and a low tolerance...