ரிசர்வ் வங்கி , நாட்டின் தனியார் துறை வங்கிகளுக்கான பங்குகள் மீதான உரிமை விதிமுறைகளை தளர்த்தியுள்ளதால் இண்டஸ்இன்ட் வங்கியில் தனது பங்குகளின் எண்ணிக்கையை உயர்த்த திட்டமிட்டுள்ளனர் பிரபல இந்துஜா சகோதரர்கள். ஐஐஎச்எல் மூலம் இந்துஜா சகோதரர்கள் 16.5 சதவீத இண்டஸ்இன்ட் வங்கியின் பங்குகளை வைத்துள்ளனர் என்று சமீபத்திய அறிக்கையொன்று தெரிவிக்கின்றது. தங்கள் பங்குகளை உயர்த்தும்படி சகோதரர்கள் கோரிக்கை விடுத்ததை ரிசர்வ் வங்கி நிராகரித்தது.
ஆனால் அதேவேளையில் கடந்த வெள்ளிக்கிழமை ரிசர்வ் வங்கி பெரிய வணிக நிறுவனங்கள் வங்கிகளை அமைப்பது தொடர்பான யோசனையை நிராகரித்தது. ஆனால் தனியார் வங்கிகளில் 15 – விருந்து 26 சதவீதம் தங்கள் பங்குகளை அவர்கள் உயர்த்திக் கொள்ளலாம் என ஒழுங்கு முறை ஆணையம் ஒப்புதல் அளித்தது. இந்துஜா சகோதரர்களில் ஒருவரான அசோக் இந்துஜா, இந்த முடிவை வரவேற்பதோடு, 26 சதவீத பங்கு முதலீட்டாளர்களுக்கான வழிகாட்டும் அரசின் நெறிமுறைக்காக தாங்கள் ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்தார்.