வேலை தேடுபவரா நீங்கள்? குட் நியூஸ்! IT நிறுவனங்களில் ஒரு லட்சம் இடங்களுக்கு மேல் காலி!

Date:

2020, படித்து முடிக்க ஒரு மோசமான ஆண்டாக கருதப்பட்டது. நிறைய பேர் வேலையில் சேர சிரமப்பட்டார்கள். கம்பெனிகளும் பணியில் ஆட்களை சேர்க்க தயங்கினர். இது போதாதென்று ஏற்கனவே வேலைகளில் இருப்பவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். ஆனால் இப்போது இந்த நிலை மாறும் என்று எதிர்பாக்கப்படுகிறது. சுமார் 150,000 க்கும் மேற்பட்ட புதிய பட்டதாரிகளை ஐ.டி நிறுவனங்கள் பணியில் நியமிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் முதன்மை நிறுவனங்களான டி.சி.எஸ், இன்போசிஸ், விப்ரோ மற்றும் எச்.சி.எல் டெக்னாலஜிஸ் போன்றவை 1,20,000 பட்டதாரிகளை பணியில் நியமிப்பார்கள் என்றும் நடுத்தர நிறுவனங்கள் ஆன லார்சன் அன்ட் டூப்ரோ இன்போடெக், மைண்ட்ரீ ஆகியவை கணிசமான நபர்களை பணியில் சேர்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது நடைபெற காரணங்கள் என்ன? இந்த மாற்றத்துக்கான காரணங்கள் என்ன?

IT நிறுவனங்கள் தங்களிடம் வேலையில் இருந்தவர்களை பயன்படுத்தி விட்டனர். அவர்களுக்கு புதிய திறமைசாலிகள் தேவை, ஏனெனில் பல புதிய ஒப்பந்தங்களை அவர்கள்பெற்றிருக்கிறார்கள். டி.சி.எஸ் Prudential Financial deal- ஐ வென்றது, இன்போசிஸ் Daimler ஒப்பந்தத்தை வென்றது மற்றும் விப்ரோ Metro AG யிடமிருந்து ஒரு ஒப்பந்தத்தை பெற்றது.

தற்போதைய சந்தை நிலையில் அனுபவம் வாய்ந்தவர்களுக்கு அதிக ஊதியம் வழங்க நேரிடும் என்பதால் நிறுவனங்கள் புதியவர்களை பணி நியமனம் செய்வதில் அதிக அக்கறை காட்டுகின்றன.

இனி எல்லாம் சுபமே!

ஜூன் வரை மேலே குறிப்பிடப்பட்டுள்ள நான்கு பெரிய நிறுவனங்களும் சுமார் 48,500 புதிய நபர்களை வேலைக்கு எடுத்தனர். டி.சி.எஸ் ஜூன் காலாண்டில் 5 லட்சம் ஊழியர்களைக் கடந்தது, புதிதாக 20,400 க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியில் சேர்த்தது. இன்போசிஸ் 8,200 க்கும் மேற்பட்ட பட்டதாரிகளை சேர்த்தது. விப்ரோ 12,000 க்கும் அதிகமானோரை பணியில் நியமித்தது. எச்.சி.எல் டெக்னாலஜிஸ் 7,500 ஊழியர்களை பணியில் சேர்த்தது.

இன்போசிஸ் தலைமை செயல் அலுவலர் (chief operating officer) பிரவீன் கூறுகையில், 2022 ஆம் நிதியாண்டில் கல்லூரிகளில் இருந்து உலகம் முழுவதும் சுமார் 35,000 புதிய பட்டதாரிகளை ஐ பணியமர்த்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதோடு மட்டும் இல்லாமல் மூத்த ஊழியர்களின் திறமையை மேம்படுத்துவதிலும் நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன.

இந்த ஆண்டு 22,000 க்கும் மேற்பட்ட பட்டதாரிகளை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக எச்.சி.எல் டெக்னாலஜிஸ் இன்  மனிதவள தலைமை அதிகாரி வி.வி.அப்பாராவ் தெரிவித்துள்ளார்.

புதிதாக வரும் “ப்ரொஜெக்ட்ஸ்” களுக்காக மட்டும் அவர்கள் புதியவர்களை நியமிக்கவில்லை. ஏற்கனவே வேலையில் இருந்து பல்வேறு காரணங்களுக்காக விலகிச் சென்றவர்களின் காலியிடங்களை நிரப்புவதற்காகவும் புதியவர்கள் நியமிக்கப்படுவார்கள். அவ்வாறு வெளியே சென்றவர்களில் பலரும் இரண்டு முதல் 10 ஆண்டுகள் வரை அனுபவம் வாய்ந்தவர்கள்.

விப்ரோ தலைமை நிர்வாக அதிகாரி தியரி டெலாபோர்டே கூறுகையில், கோவிட் பெருந்தொற்றால் உலகம் முழுவதும் பலரும் தங்கள் வீட்டில் இருந்தபடியே வேலை செய்கிறார்கள். பலரும் வேலையை விட்டு சென்றனர். ஆகையால் விப்ரோவும் பட்டதாரிகளை இரட்டிப்பாக்க இருக்கிறது. எங்களிடம் உள்ளோரின் திறமையையும் மேம்படுத்தவுள்ளோம் என்று கூறினார்.

இரண்டு லட்சம் ஊழியர்களைக் கடந்த விப்ரோ, கடந்த காலாண்டில் 12,150 புதிய ஊழியர்களைச் சேர்த்தது; இதில் 2,000 க்கும் மேற்பட்டவர்கள் புதிய பட்டதாரிகள். இந்த காலாண்டில் மேலும் 6,000 புதிய பட்டதாரிகளை விப்ரோ பணியில் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேவையைப் பொறுத்து நடுத்தர மற்றும் உயர் பதவிகளிலும் ஆட்களை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

தொடரும் நற்செய்தி…

திறமைக்கான தேவை அடுத்த நிதியாண்டிலும் நீடிக்கும் என்று நிபுணர்கள்கருதுகிறார்கள். உதாரணமாக, விப்ரோ இந்த ஆண்டு 30,000 பட்டதாரிகளுக்கு offer letters வழங்க விரும்புகிறது; அதில் சுமார் 22,000 பேர் அடுத்த ஆண்டில் தான் நிறுவனத்தில் சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெரும்பாலான ப்ராஜெக்ட்ஸ்களுக்கு டிஜிட்டல் திறமை உள்ளவர்கள் தேவை. டிஜிட்டல் திறமைக்கான தேவை Q1 (quarter 1) இல் 50% அதிகரித்துள்ளது, மேலும் இந்த போக்கு Q2 மற்றும் ஆண்டின் பிற்பகுதியில் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, என்று Team Lease Digital லின் சிறப்பு பணியாளர்கள் (specialised staffing) தலைவர் சுனில் சி கூறுகிறார்.

இந்தியாவில் சரியான திறமையாளர்கள் கிடைப்பது குறித்து கவலைகள் இருந்தாலும், இங்கு வேலை வாய்ப்புகளுக்கு பஞ்சமில்லை என்று டி.சி.எஸ் நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி (chief operating officer) என் ஜி சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். உலகில் வேறு எங்கும் கிடைக்காத அற்புதமான திறமைசாலிகள் இந்தியாவில் உள்ளனர் என்று அவர் பாராட்டியுள்ளார். இந்திய தொழில்நுட்ப துறையில் சம்பளமும் நன்றாக உள்ளதென்று மேலும் அவர் கூறினார்.

2 COMMENTS

  1. sir , do freshers with 0 experience will have jobs in the mentioned company?
    and if so, they hire only toppers, & what about those people who just clear the subjects with aggregate of 55%?
    can you bring up any ideas for jobless students?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

Burberry is the First Brand to get an Apple Music Channel Line

Find people with high expectations and a low tolerance...

For Composer Drew Silva, Music is all About Embracing Life

Find people with high expectations and a low tolerance...

Pixar Brings it’s Animated Movies to Life with Studio Music

Find people with high expectations and a low tolerance...

Concert Shows Will Stream on Netflix, Amazon and Hulu this Year

Find people with high expectations and a low tolerance...