இந்திய பங்குச் சந்தைகள் இன்று வர்த்தகத்தின் தொடக்கத்திலேயே 400 புள்ளிகளுக்கு மேல் சரிந்து வர்த்தகத்தை தொடங்கி உள்ளன. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் எப்டி 17 ஆயிரத்து 550 புள்ளிகள் என்ற நிலையில் உள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 58 ஆயிரத்து 800 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. நிதித்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை, வாகனத் துறை பங்குகளில் சுமார் ஒரு சதவீதம் அளவிற்கு சரிவு காணப்படுகிறது. அமெரிக்க பங்குச் சந்தைகள் சரிவுடன் நிறைவடைந்த நிலையில், அது சர்வதேச அளவில், பங்குச்சந்தைகளில் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகளிலும் இந்த சரிவு எதிரொலிக்கிறது. தற்போது வர்த்தகம் தொடங்கி இருக்கக்கூடிய நிலையில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 318 புள்ளிகள் சரிந்து 58 ஆயிரத்து 870 புள்ளிகள் என்று நிலையிலும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி 84 புள்ளிகள் சரிந்து 17 ஆயிரத்து 572 புள்ளிகளிலும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.