2015- ம் ஆண்டு பெய்த அதிக மழைக்கு பிறகு, ரியல் எஸ்டேட் துறை மிகப்பெரும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இருந்தபோதும், பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் அதன் விளம்பரங்களை நிறுத்தவே இல்லை. ஆனால் ’ரியல் எஸ்டேட்டில் முதலீடு’ என்ற வார்த்தை இப்போது பயன்படுத்தப்படவில்லை.
2015-ம் ஆண்டு பெய்த அதிகளவு மழையால் சென்னையின் முக்கிய இடங்களில் பல குடியிருப்புகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. பல்வேறு பொய்யான வெற்று விளம்பரங்களை வெளியிட்டு, மக்களை நம்ப வைத்து, ரியல் எஸ்டேட் துறையினர் ஊகவணிகத்தில் ஈடுபட்டு வந்தனர்.

ஆனால், 2015-க்கு பிறகு, பெரும்பாலான பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் குறிவைக்கும் உயர்-நடுத்தர வர்க்கம் மற்றும் பணக்காரர்கள், பண விஷயத்தில் இப்போது சில நல்ல பாடங்களைக் கற்றுள்ளனர். இந்த பாடங்கள் பணத்தை ரியல் எஸ்டேட்டில் வீடு வாங்குவதற்காக செலவழிப்பதற்கான வாய்ப்புகள் குறைய வழிவகுத்து, அதிக சேமிப்புக்கு வித்திட்டது.
மேலும், பங்குகளின் விலைகள் கூடி, ஏற்கனவே பங்குகளில் அதிகம் முதலீடு செய்தவர்களுக்கு உதவுகின்றன. அதாவது பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகிவிட்டனர்.
ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்கள் வீடுகளின் விலைகளை உயர்த்துகின்றனர். இந்த விலையேற்றம், வீடுகளை விலை உயர்ந்ததாக ஆக்குகிறது. உண்மையிலேயே வீடு வாங்க விரும்புபவர்களுக்கு அது கட்டுப்படியாகாது.
பல ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்கள் தங்கள் வீடுகளை பூட்டி வைத்திருக்கிறார்கள். அவற்றை வாடகைக்கு விடுவதை விரும்பவில்லை.
வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் 10%க்கு அருகில் இருந்தன, வாடகை 2% ஆக இருந்தது. இது, வீட்டை முதலீடாக வாங்காமல் இருந்தால், அவர்கள் செலுத்துவதை விட குறைவான வருமான வரியைச் செலுத்தவும் உதவியது.
முதலீடாக ஒரு வீட்டை வாங்கி விற்ற ரியல் எஸ்டேட் முதலீட்டாளருக்கு வீட்டை வாங்கி பூட்டி வைப்பது என்பது நிதி மூலதனத்தின் பெரும் விரயமாகும், இதை அரசாங்கம் எந்த வகையிலும் ஊக்குவிக்கக்கூடாது. குறியீட்டு வசதி ஒரு நபரின் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே இருக்க வேண்டும். அந்த வசதியைப் பெற்ற பிறகு, மீண்டும் அதைப் பயன்படுத்த வரிச் சட்டங்கள் அனுமதிக்கக் கூடாது. மேலும், இந்த வசதி தனிநபர்களுக்கு மட்டுமே இருக்க வேண்டும்.
ஊகத்திற்காக அல்லாமல் வாழ்வதற்காக வீடு வாங்குவதை ஊக்குவிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாக இருக்க வேண்டும். சிஸ்டம் இயங்குவதற்கு சில ஊகங்கள் அவசியம் என்றாலும், இப்போது வரை இருந்ததைப் போல அதை ஊக்குவிக்கக் கூடாது.