கடந்த சில ஆண்டுகளாக வங்கிகள் நிலையான வைப்புத் தொகையின் (FDக்கள்) வட்டி விகிதங்களை குறைத்த பிறகும், சில வங்கிகளும், வங்கியல்லாத நிதி நிறுவனங்களும் (NBFC) வட்டி விகிதங்களை உயர்த்தத் தொடங்கியுள்ளன. ரிசர்வ் வங்கி தற்போது உள்ள நிலையைப் பேணியுள்ளது. முடிந்த இரண்டு வாரங்களில் எச்டிஎஃப்சி வங்கி, எச்டிஎஃப்சி மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகியவை வைப்புத் தொகைக்கான வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளன.
ரிசர்வ் வங்கி தனது இருமாத நாணயக் கொள்கை மதிப்பாய்வுக்குப் பிறகு டிசம்பர் 8ம் தேதியன்று ரெப்போ மற்றும் ரிவர்ஸ் ரெப்போ விகிதங்களை மாற்றாமல் வைத்திருக்கும் முடிவினை அறிவித்தது. மே 2020 முதல் கொள்கை முடிவுகளில் எந்தவிதமான மாற்றங்களும் இல்லை. ஏப்ரல் 2001க்குப் பிறகு 4 சதவீதம் என்ற ரெப்போ விகிதம் மிகவும் குறைவு. ரிசர்வ் வங்கியின் கொள்கை காரணமாக கடந்த பல ஆண்டுகளாக வைப்புத் தொகைக்கான வட்டி விகிதம் குறைவாகவே உள்ளது.
எனவே சமீபத்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு பின்னர் வைப்புத் தொகை முதலீட்டாளர்கள் தங்கள் வருமானத்தை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்? வட்டி விகிதங்கள் உயரும் போதெல்லாம் குறுகிய முதல் நடுத்தர வைப்புநிதிகளுக்கான வட்டி விகிதங்கள் உயர்த்தப்படுகின்றன. ஒரு வாரத்திற்கு முன்பு எச்டிஎஃப்சி வங்கி, வைப்புத் தொகைக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியது.
மற்றொன்று, நீண்டகால வைப்புத் திட்டங்களில் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். தற்போது உள்ள சூழ்நிலையில் ஓராண்டு அல்லது அதற்கும் குறைவான கால வைப்புகளை தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் பணத்தை நீண்ட காலத்திற்கு முதலீடு வைப்பதை தவிர்க்கலாம்.
முதலீட்டாளர்கள் தங்கள் வருமானத்தை அதிகரிக்க என்ன செய்யலாம்?
நிதி திட்டமிடுபவர்களின் கூற்றுப்படி, ஒரு வைப்பு தொகையை, வெவ்வேறு சிறு சிறு வைப்புத் தொகையாக மாற்றி வைக்க வேண்டும். உதாரணமாக உங்களிடம் 5 இலட்சம் ரூபாய் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதை 5ஆகப் பிரித்து வெவ்வேறு தவணைகளில் முதலீடு செய்ய வேண்டும். இப்படி நாம் முதலீடு செய்தால் பணம் நாம் நினைத்தப்படி பணம் பெருகும் என்று கூறுகின்றனர்.
அடுத்ததாக ஃப்ளோட்டிங் ரேட். டெபாசிட் மீதான வட்டி விகிதங்கள் ஒரு குறியீட்டுடன் இணைக்கப்படும். குறியீடுடன் இணைக்கப்பட்ட முதலீடுகள் உயரும் போதெல்லாம் வைப்பு நிதிகளின் வட்டி விகிதமும் உயரும். தற்போது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் ஐடிபிஐ வங்கி ஆகியவை ஃப்ளோட்டிங் ரேட் விகித கால வைப்புகளை வழங்குகின்றன. ரிசர்வ் வங்கியின் ஃப்ளோட்டிங் ரேட் தேசிய சேமிப்பு சான்றிதழ் பத்திரங்களுடன் இணைக்கப்பட்டு, தற்போது 7 வருட கால அவகாசத்துடன் 7.15 சதவீத வட்டியை வழங்குகிறது. மத்திய அரசு ஏதேனும் மாற்றம் செய்தாலேயொழிய இந்த ஃப்ளோட்டிங் ரேட்டில் மாற்றம் இருக்காது.