கனரா HSBC ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேசன் லிமிடெட்டின் பங்குதாரர்களில் ஒருவரான HSBC இன்சூரன்ஸ் (ஆசியா பசிபிக்) ஹோல்டிங்ஸ் லிமிடெட் (INAH), இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் பங்குகளை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது என்று PNB ஒழுங்குமுறை தாக்கல் செய்ததில் தெரிவித்துள்ளது.
OBC-யின் பங்குகளை வாங்கிய PNB:
2020-ம் நிதியாண்டில், பழைய ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் (OBC) இணைப்புக்கு பிறகு பஞ்சாப் நேஷனல் வங்கி , ஆயுள் காப்பீட்டில் பங்குகளை வாங்கியது. இணைப்புக்கு முன் OBC ஆனது ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் 23 சதவீத பங்குகளை வைத்திருந்தது. இது ஒன்றிணைந்ததன் மூலம் PNB-க்கு கிடைத்துள்ளது.
கனரா வங்கி 51 சதவீத பங்குகளையும், HSBC இன்சூரன்ஸ் (ஆசியா பசிபிக்) ஹோல்டிங்ஸ் லிமிடெட் வெளிநாட்டு பங்குதாரராக 26 சதவீதத்தையும் கொண்டுள்ளது.
PNB மற்றொரு காப்பீட்டு நிறுவனமான PNB Metlife இன்சூரன்ஸின் 30 சதவிகிதம் அதிகப் பங்குகளை வைத்துள்ளது. நிறுவனம் 2001-ல் நிறுவப்பட்டது.
இதில் மற்ற பங்குதாரர்களில் அமெரிக்காவை தளமாகக் கொண்ட மெட்லைஃப் 26 சதவீதம், எல்ப்ரோ (21 சதவீதம்) மற்றும் எம் பல்லோன்ஜி & கம்பெனி (18 சதவீதம்) ஆகியவை அடங்கும்.
இந்திய இன்சூரன்ஸ் ரெகுலேட்டரி மற்றும் டெவலப்மென்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா(Idai)-வின் தற்போதைய காப்பீட்டு வழிகாட்டுதல்களின்படி, ஒரு இரண்டு காப்பீட்டு முயற்சிகளில் 10 சதவீதத்திற்கு மேல் பங்குகளை வைத்திருக்க முடியாது.
முன்னதாக மே 2021-ல், கனரா எச்எஸ்பிசி ஓபிசி லைஃப் இன்சூரன்ஸ் கோ லிமிடெட் பங்குகளை விலக்குவதாக PNB கூறியது குறிப்பிடத்தக்கது.