சமீபத்திய விமான போக்குவரத்துத்துறை வரலாற்றிலேயே இல்லாத வகையில் ஏர் இந்தியா ஒரே நேரத்தில் 500 ஜெட் வகை விமானங்களை வாங்க ஆர்டர் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டாடாசன்ஸ் குழுமம் நிர்வகித்து வரும் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு என 430 நேரோ பாடி வகை ஜெட்களும், 70 அகண்ட பாடி வகை ஜெட்களும் வாங்கப்படுகின்றன ஆர்டர் கொடுத்த இத்தனை விமானங்களும் அடுத்த 7 அல்லது 8 ஆண்டுகளில் டாடா நிர்வாகத்தின் கைகளுக்கு கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 500ஜெட்களில் ஐரோப்பிய விமான தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ் நிறுவனம் தான் 240 A320 நியோ ரக விமானங்களையும், A350 ரக விமானங்கள் 40ஐ தயாரிக்க ஒப்பந்தம் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் போயிங் நிறுவனம் 737 மேக்ஸ் வகையில் 190 விமானங்களையும், 787 மேக்ஸ் ரக விமானங்கள் 20, மற்றும் 777X ரக விமானங்கள் 10 விமானங்கள் டாடா குழுமத்துக்காக தயாரிக்க இருக்கிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு அடுத்தவாரம் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மதிப்பு 150 பில்லியன் டாலராக இருக்கும் என்றும் ஏர் இந்தியா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏர்பஸ் நிறுவனத்துடன் டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன் நடத்திய சந்திப்பில் இந்த டீல் இறுதியாகியுள்ளது. நேரோபாடி வகை விமானங்கள் இந்தியாவுக்குள் அல்லது அதிகபட்சம் 4 அல்லது 5 மணிநேரம் வரை பறக்கும் சேவைகளுக்கு பயன்படுத்தப்பட இருக்கிறது. பெரிய விமானங்கள் அமெரிக்கா,ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இயக்கப்பட உள்ளது. வரும் 2024 நிதியாண்டின் இறுதிக்குள் புதிதாக 50 விமானங்கள் வந்துவிட்டால் ஏர் இந்தியாவின் விமான எண்ணிக்கை 50%அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு 500 ஜெட் வேணும் பாஸே.. மொரட்டு ஆர்டர் கொடுத்த ஏர் இந்தியா நிறுவனம்!!
Date: