அமெரிக்காவில் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு கடன் கொடுத்து சிலிக்கான் வேலி வங்கி திவாலானது. இந்த நிலையில் நியூயார்க்கில் உள்ள சிக்னேச்சர் வங்கியின் நிலையும் மிகவும் பரிதாபகரமான நிலையில் இருப்பதால் அதையும் அந்த மாகாண அதிகாரிகள் இசைவு தெரிவித்துவிட்டனர். சிலிக்கான் வங்கி திவாலான 48 மணிநேரத்துக்குள் சிக்னேச்சர் வங்கியும் திவாலாகி கிடக்கிறது. அமெரிக்க வரலாற்றிலேயே மிக மோசமான சரிவை சந்தித்த 3வது வங்கி என்ற மோசமான சாதனையை சிக்னேச்சர் வங்கி நிகழ்த்தியிருக்கிறது. சிலிக்கான் வேலி வங்கியைப் போலவே சிறப்பாக இயங்கி வந்த சிக்னேச்சர் வங்கியும், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சேவை அளித்துக்கொண்டிருக்கையில் திடீரென திவாலாகிவிட்டது. இது அந்நிறுவனத்தில் மேலாளர்களாக இருந்தவர்களை அதிர வைத்திருக்கிறது. கடந்த டிசம்பர் 31ம் தேதி வரை 110பில்லியன் சொத்தை இந்த வங்கி வைத்திருந்தது.88.59 பில்லியன் டாலர் அளவுக்கு இந்த வங்கியில் டெபாசிட்கள் செய்யப்பட்டிருந்தன. சிலிக்கான் வேலி வங்கிக்கு என்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டனவோ அதே கட்டுப்பாடுகள் இந்த வங்கிக்கும் பொறுந்தும் என்றும் FDIC அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்தாண்டு FTX என்ற கிரிப்டோ கரன்சி நிறுவனம் திவாலானபோதே, சிக்னேச்சர் வங்கியின் பெயரும் அடிபட்டு வந்தது. இந்த நிலையில் திடீரென திவாலானதாக அந்த வங்கி கையை விரித்துள்ளது. FTX திவாலானபோது, தங்கள் நிறுவனம் வெறும் பூஜ்ஜியம் புள்ளி 1 விழுக்காடு அளவு தொகையை மட்டுமே FTX-ல் முதலீடு செய்திருந்ததாகவும்,சிக்னேச்சர் வங்கி தெரிவித்து இருந்தது. FTX சரிவின்போது சில்வர்கேட் என்ற நிறுவனமும் சரிவை சந்தித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தா பாருங்க இன்னொரு பேங்க் ஸ்வாஹா…!!!
Date: