இந்தியாவில் பணவீக்கம் அடுத்தாண்டின் முதல் காலாண்டில் 5% ஆக குறையும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் கூறியுள்ளார். Zee business தொலைக்காட்சி நிறுவனத்துக்கு அவர் அண்மையில் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
நாட்டின் பணவீக்கத்தை 2-6% ஆக வைக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்ட நிலையில் நாட்டின் பணவீக்கம் கடந்த ஜூலையில் 6.7%ஆக உள்ளது.
பொருளாதார வளர்ச்சியை பாதிக்காமல் பணவீக்கத்தை கட்டுப்படுத்த உள்ளதாகவும் சக்தி காந்த தாஸ் கூறியுள்ளார்.
அண்மையில் ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை கூட்டத்தில் ரெபோ விகிதம் 50அடிப்படை புள்ளி கள் உயர்த்தி தொடர்ந்து 3வது முறையாக அறிவித்துள்ள ரிசர்வ் வங்கியின் ஆளுநர் இவ்வாறு கூறியுள்ளார்.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், வெளிநாட்டு பணத்தை மாற்றும் ரிசர்வ் வலுவாக உள்ளதால். இந்திய ரூபாய் வலுவாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 19 ம் தேதி வரை ரிசர்வ் வங்கியின் வெளிநாட்டு ரிசர்வ் மதிப்பு 564.05பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆக உள்ளது.
ரிசர்வ் வங்கியின் அடுத்த நிதி கொள்கை கூட்டம் வரும் 30 ம் தேதி நடைபெற உள்ளது.