இந்த ஆண்டு ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்தியாவில் தங்கத்தின் தேவை 19.2 சதவீதம் அதிகரித்து 76.1 டன்களாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டு பொருளாதார நடவடிக்கைகளை பாதித்த நாடு தழுவிய பொது முடக்கம் காரணமாக நிலவிய குறைந்த அளவிலான இயக்கம் காரணாமாக நிகழ்ந்திருக்கிறது என்று உலக தங்க கவுன்சில் (World Gold Council) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. WGC யின் “தங்கத்தின் தேவைக்கான போக்குகள் – இரண்டாவது காலாண்டு 2021” அறிக்கையின்படி, 2020 காலண்டர் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் ஒட்டுமொத்த தங்கத்தின் தேவை இந்தியாவில் 63.8 டன்களாக இருந்தது. மதிப்பு அடிப்படையில், இந்தியாவின் தங்கத்தின் தேவை ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ₹32,810 கோடியாக 23 சதவீத வளர்ச்சியைக் கண்டது. ஆண்டுக்கு ஆண்டு ஒப்பீட்டு நோக்கில் 2020 ஆம் ஆண்டின் இதே காலத்தில் ₹26,600 கோடியாக இருந்தது. இருப்பினும், கோவிட்-19 இன் இரண்டாவது அலை நாட்டைத் தாக்கியதால், தங்கத்தின் தேவை இதே காலாண்டில் 46 சதவீதம் சரிந்தது என்று அந்த அறிக்கை கூறுகிறது.
“H1 வகை தங்கத்தின் தேவை 157.6 டன்களாகக் குறைந்தது. இது ஒப்பீட்டளவில் H1, 2019 ஐ விட 46 சதவீதம் குறைவாகும். மேலும் 2015-2019 வரையிலான H1 சராசரியை விட 39 சதவீதம் குறைவாகும்,” என்று WGC அறிக்கை கூறுகிறது. “கோவிட் தொற்று அதிகரித்ததைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் பெரிய அளவிலான மண்டல முடக்கங்களால் சந்தை மூடப்பட்டிருந்தது. முந்தைய ஆண்டு ஒரு தேசிய முடக்கம் வணிகங்களை கடுமையான சிக்கலில் ஆழ்த்தியது போலல்லாமல், வணிக மையங்கள் இதற்குத் தயாராக இருந்ததால் இந்த காலாண்டு ஒப்பீட்டளவில் சிறப்பாக இருந்தது.
“இரண்டாம் காலாண்டு 2021-ல் தங்கத்தின் தேவை ஆண்டுக்கு ஆண்டு ஒப்பீட்டளவில் 19.2 சதவீதம் அதிகரித்துள்ளது. இருப்பினும், அக்ஷய திரிதியை மற்றும் இரண்டாம் காலாண்டின் திருமண காலத்தில் தேவையை முற்றிலுமாக முடக்கியதால் அதன் தாக்கம் மிகக் கடுமையாக இருந்தது என்று WGC மண்டலத் தலைமை நிர்வாக அதிகாரி, சுந்தரம் பி.ஆர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறினார். இரண்டாவது காலாண்டில் மொத்த நகைகளின் தேவை 25 சதவீதம் உயர்ந்து 55.1 டன்னாக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே காலாண்டில் 44 டன்னாக இருந்தது என்று WGC அறிக்கை கூறுகிறது.
பண மதிப்பு அடிப்படையில் நகைகளின் தேவை கடந்த ஆண்டு (2020) இதே காலத்தில் ₹18,350 கோடியுடன் ஒப்பிடும் போது ₹23,750 கோடியாக உயர்ந்து 29 சதவீதம் அதிகரித்துள்ளது. 2020 ஏப்ரல்-ஜூன் காலாண்டு காலத்தின் தேவையான 19.8 டன்களுடன் ஒப்பிடுகையில், 2021, இரண்டாவது காலாண்டில் தங்கத்துக்கான தேவை நாட்டில் 6 சதவீதம் அதிகரித்து 21 டன்னாக உள்ளது. 2020 ஆம் ஆண்டின் இதே காலாண்டில் ₹8,250 கோடியாக இருந்த தங்க முதலீட்டுத் தேவை பண மதிப்பு அடிப்படையில் 10 சதவீதம் உயர்ந்து ₹9,060 கோடியாக இருந்தது. இரண்டாவது காலாண்டில் இந்தியாவில் மறுசுழற்சி செய்யப்பட்ட மொத்தத் தங்கத்துக்கான முதலீட்டுத் தேவை மதிப்பானது 2020 ஏப்ரல்-ஜூன் மாதத்தில் 13.8 டன்களுடன் ஒப்பிடும்போது 19.7 டன்களாக உயர்ந்திருக்கிறது, இது ஒட்டுமொத்தமாக 43 சதவீத அதிகரிப்பாகும்.
WGC அறிக்கை தரவுகளின் படி, 2020 ஆம் ஆண்டில் 10.9 டன் தேவையுடன் ஒப்பிடும்போது, ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்தியாவில் தங்க இறக்குமதி 120.4 டன்களாக உயர்ந்துள்ளது. டிஜிட்டல் தீர்வுகள் மற்றும் சில பரிமாற்றங்களில் உள்ள கட்டுப்பாடுகளில் நிகழ்ந்த இடைநிறுத்தம் நகைத் தேவையில் 25 சதவீதம் அதிகரித்து 55.1 டன்னாக உயர்ந்து வளர்ச்சியை எட்ட வழி வகுத்திருக்கிறது என்று சோமசுந்தரம் மேலும் குறிப்பிட்டார்.
“விலைகள் ஓரளவு குறைந்ததால் முதலீட்டுத் தேவை 6 சதவீதம் உயர்ந்து 21 டன்கள் வரை வளர்ந்தது. வியப்பூட்டும் வகையில், இறக்குமதிகள் 120.4 டன்களாக அதிகரித்தன. ஒட்டுமொத்தமாக, H1, 2021-ல் இந்தியாவில் தங்கத்தின் தேவை 216.1 டன்களாக இருந்தது. இது H1 2020-க்கு எதிராக 30 சதவீதம் அதிகரித்துள்ளது” என்று அவர் மேலும் கூறினார்.
இது பல ஆண்டுகள் குறைந்ததாக இருந்தாலும், கோவிட் தீவிரத்தில் இருந்து இயல்பு நிலை மீட்டெடுக்கப்பட்டவுடன், தேவையில் ஏற்பட்டிருக்கும் ஒரு குறிப்பிடத்தகுந்த மாற்றத்துக்கான அடிப்படை தேவை வேகத்தை பிரதிபலிக்கிறது என்று அவர் கருத்து தெரிவித்தார். முன்னோக்கிச் சென்றால், தேவை இன்னும் சிறந்த வழிகளில் மீண்டும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இருப்பினும், நுகர்வோர் நம்பிக்கை மற்றும் வணிக எதிர்வினையானது கோவிட் மூன்றாவது அலையின் அச்சுறுத்தல் மற்றும் பொருளாதார மீட்சியின் வேகத்தின் தாக்கத்திற்கு உட்பட்டது என்று அவர் கூறினார்.
“ஒரு விஷயம் மிகவும் ஆறுதலளிக்கிறது. தடுப்பூசி செலுத்தும் வேகம் மற்றும் “செரோ” கணக்கெடுப்பு முடிவுகளை கருத்தில் கொண்டு, ஒரு சமூகமாக, நாம் கோவிட் பெருந்தொற்று மற்றும் அதன் தாக்கங்களுடன் வாழக் கற்றுக் கொள்ளலாம், வணிகங்கள் மற்றும் விற்பனை இன்னும் சிறப்பாக மாறுவதை உறுதி செய்யலாம்,” என்று அவர் சுட்டிக்காட்டினார்.
முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், நான்காவது காலாண்டு 2021 இல் மிகவும் மங்களகரமான திருமண நாட்களைக் கொண்டது. தீபாவளி மற்றும் வரவிருக்கும் விழாக்காலங்கள் தேவைக்கு சாதகமானதாகத் தோன்றுகின்றன என்று சுந்தரம் கூறினார். “ஆனால், தங்க முதலீட்டுப் பிரிவுக்கு, கவர்ச்சிகரமான அதீத மதிப்பில் இருக்கும் பங்குச் சந்தைகள் மற்றும் ஏற்ற இறக்கமான தங்க விலை மிகப்பெரிய தலைவலியாக இருக்கிறது. நுகர்வோர் செயல்பாடுகள் இந்தியாவில் முழு ஆண்டு தங்கத் தேவை பற்றிய எந்த முன்முடிவுகளையும் எடுப்பதில் பெரும் சிக்கலை ஏற்படுத்தும் பல பொருளாதார மற்றும் பொருளாதாரமல்லாத காரணிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது” என்று அவர் மேலும் கூறினார்.
Credits: Money Control