உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கியது முதல் பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்தனர். இதனால் ரஷ்யாவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தது. ஆனால் இந்தியா இந்த விவகாரத்தை சாதுர்யமாக கையாண்டது. ஒரு காலத்தில் espo என்ற கச்சா எண்ணெய் வாங்க சீனா தான் போட்டி போடும். ஆனால் தற்போது அங்குள்ள எண்ணெய் நிறுவன அதிகாரிகளிடம் பேசி குறைந்த விலையில் கச்சா எண்ணெயை இந்தியா வாங்கியுள்ளது.
மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகளை அடுத்து வாங்க ஆளில்லாமல் கிடந்த espo ரக கச்சா எண்ணெயை இந்தியா குறைந்த விலையில் அதிகம் வாங்கியுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.6 பெரிய சரக்கு கப்பலில் எண்ணெய் இந்தியாவுக்கு வந்து கொண்டிருக்கிறது . இதன் காரணமாக, எண்ணெய் சுத்திகரிப்பு செய்யும் நிறுவனங்கள் பலன் பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் குறைந்த விலை வாங்கப்படும் கச்சா எண்ணெய் மூலம் எடுக்கப்படும் பெட்ரோல், டீசல் விலை குறையுமா என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது.