ஒருநாட்டுக்கு அந்நிய செலாவணி அதாவது வெளிநாட்டு பணம் குறிப்பாக டாலர் கையிருப்பு என்பது மிக மிக முக்கியமானதாகும். அண்மையில் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் டாலர் கையிருப்பு குறைந்ததை கண்கூடாக நாம் பார்த்து வந்தோம். இந்த நிலையில் இத்தகைய நிதி சிக்கலில் சிக்கியுள்ள நாடுகளுடன் ரூபாயில் வர்த்தகத்தை செய்ய இருப்பதாக வணிகத் துறை செயலாளர் சுணில் பர்த்வால் தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஏற்றுமதியை 2030ம் ஆண்டுக்குள் 2 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்ற இது உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பை உயர்த்தும் நோக்கில் வெளிநாட்டு வர்த்தக கொள்கை மாற்றுப்பட்டு உள்ளதாக கூறியுள்ள அவர், இந்திய ரூபாயினை உலகளாவிய செல்வாக்கு மிக்க பணமாக மாற்றும் திட்டம் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சிறப்பு ரசாயனங்கள்,மூலப்பொருட்கள்,உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களுக்கு தனி கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
ரூபாயிலேயே வர்த்தகம் செய்ய இந்தியா திட்டம்!!!
Date: