டெஸ்லாவின் இந்தியக் கனவு கலைகிறதா? எலான் மஸ்க்குக்கு ஏமாற்றமளித்த அரசு!

Date:

வரிகளை குறைக்க டெஸ்லா (Tesla) இந்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தது. முன்பு அதன் தலைவர் எலான் மஸ்க் (Elon Musk) இங்கு ஒரு உள்ளூர் தொழிற்சாலையை நிறுவ விரும்பினார். ஆனால் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான இறக்குமதி வரியைக் (import duties) குறைக்கும் திட்டம் இல்லை என்று இந்தியா கூறியுள்ளது.

“கனரக தொழில்துறை அமைச்சகத்தில் (Ministry of Heavy Industries) இதுபோன்ற எந்த திட்டமும் பரிசீலனையில் இல்லை” என்று இளைய அமைச்சர் கிரிஷன் பால் குர்ஜார் (Junior minister Krishan Pal Gurjar) நாடாளுமன்றத்தில் கூறினார். உள்நாட்டு வரிகளைக் குறைத்து (domestic taxes), charging நிலையங்களைச் சேர்ப்பதன் மூலம் மின்சாரக் கார்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் கூறினார்.

உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்க விரும்பும் பிரதமர் நரேந்திர மோடியின் நிர்வாகத்திற்கும், நாட்டில் ஒரு தொழிற்சாலையை நிறுவுவதற்கு முன்னர் கார்களை மிகவும் மலிவாக இறக்குமதி செய்ய அனுமதிக்குமாறு இந்தியாவை வலியுறுத்தி வரும் டெஸ்லாவுக்கும் இடையே ஒரு போர் நடந்து கொண்டிருக்கிறது.

மின்சார கார்களின் இறக்குமதி வரியை (import duty) தற்போதைய வரம்பான  60 % முதல் 100 % இலிருந்து 40% ஆகக்  குறைக்குமாறு டெஸ்லா கடந்த மாதம் போக்குவரத்து மற்றும் தொழில்துறை அமைச்சகங்களுக்கு கடிதம் எழுதியது. இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களுடன் முதலில் விற்பனையைத் தொடங்கினால், டெஸ்லா இந்தியாவில் ஒரு தொழிற்சாலையை தொடங்குவது “சாத்தியம்” என்று மஸ்க் மேலும் டீவீட் செய்தார்.

மஸ்க் பல ஆண்டுகளாக இந்தியாவில் நுழைய தனது ஆர்வத்தை வெளிப்படுத்தி உள்ளார், ஆனால் உயர் வரி விகிதங்கள் (higher duties) டெஸ்லா கார்களை இங்கு விற்பனை செய்யத் தடையாக இருக்கும்”  என்று அவர் புகார் கூறுகிறார்.

சீனாவின் சுமார் 5% உடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் ஆண்டு வாகன விற்பனையில் மின்சார வாகனங்கள் 1% க்கும் குறைவாகவே உள்ளன. மிகக்குறைவான  சார்ஜிங் ஸ்டேஷன்ஸ் மற்றும் உயர் விலைபட்டியலால், இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன வியாபாரம் சூடு பிடிக்காமல் இருக்கிறது.

இதனால் மாருதி கூட அந்த பக்கம் செல்லத்  தயங்குகிறது. “துரதிருஷ்டவசமாக தற்போது இருக்கும் தொழில்நுட்பம் வழக்கமான கார்களை விட மிக அதிக விலையில் மின்சாரக் கார்கள் தயாரிக்க வழி வகுக்கிறது” என்று மாருதியின் தலைவர் ஆர்.சி. பார்கவா கூறினார்.

“சார்ஜ் செய்யும் உள்கட்டமைப்பின் பற்றாக்குறையும் இருப்பதினால், சிறிய கார்களை மட்டுமே வாங்கக்கூடிய மக்களுக்கு மின்சார கார்களை விற்பனை செய்வது மிகவும் கடினம்”, என்று அவர் மேலும் கூறினார்.

இந்தியாவில் விற்கப்படும் கார்களில் 5% மட்டுமே ₹15 லட்சத்திற்கு மேல் விலை நிர்ணயிக்கப்படுவதால், மின்சார வாகனங்களின் சந்தை ஊடுருவல் “மிகச் சிறியதாக” இருக்கும் என்று பார்கவா கூறினார். இந்தியாவில் தனிநபர் வருமானம் ₹1.5 லட்சம் மட்டுமே, இது எலக்ட்ரிக் கார்களை பெரும்பாலான மக்களுக்கு வாங்க முடியாததாக ஆக்குகிறது என்று பார்கவா கூறினார்.

ஏழை நாடுகள்  சாலைகளை மேம்படுத்துவதில்  முன்னேற்றம் இல்லாமல் இருப்பதால், காலநிலை மாற்றத்தை (climate change) எதிர்த்துப் பணக்கார நாடுகள் எரிப்பு இயந்திர வாகனங்களின் தயாரிப்பை  (combustion-engine vehicles) நிறுத்தத் திட்டமிட்டிருந்தாலும், புவி வெப்பமடைதலில் (global warming) மாற்றம் ஏற்படாது. அரசு கொடுக்கும் ஊக்கத்தொகை, உள்கட்டமைப்பு மற்றும் சார்ஜ் செய்வதில் முதலீடு போன்றவை மக்கள், எரிப்புக் கார்களை அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பாவில் கைவிடுவதை எளிதாக்குகிறது.

நிகர பூஜ்ஜிய உமிழ்வை (net-zero emissions) அடைய, மாருதி கலப்பின மாடல்களை (hybrid models) உருவாக்குவது, சுருக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் (compressed natural gas) இயங்கும் கார்களுக்கான தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது, உயிரி எரிபொருளைப்பற்றி (bio-fuel) நோக்குவது போன்ற  திட்டங்கள் உள்ளன என்று பார்கவா கூறியுள்ளார்.

கார் உற்பத்தியில் ஹைட்ரஜனின் பயன்பாடு சுவாரஸ்யமானது மற்றும் அது லித்தியத்தை இறக்குமதி செய்வதை குறைக்கும் என்று பார்கவா மேலும் கூறினார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

Burberry is the First Brand to get an Apple Music Channel Line

Find people with high expectations and a low tolerance...

For Composer Drew Silva, Music is all About Embracing Life

Find people with high expectations and a low tolerance...

Pixar Brings it’s Animated Movies to Life with Studio Music

Find people with high expectations and a low tolerance...

Concert Shows Will Stream on Netflix, Amazon and Hulu this Year

Find people with high expectations and a low tolerance...