இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கிகளை தனியார்மயமாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நவம்பர் 24ம் தேதியன்று இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா பங்குகளின் விலை 15 – 20 சதவீதம் அதிகரித்தன.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது, இரண்டு வங்கிகளின் தனியார்மயமாக்கலை செயல்படுத்துவதற்கு அமைச்சரவை முன் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் முதல் கட்டமாக இரண்டு வங்கிகளும் தங்களிடமுள்ள 51 சதவீத பங்குகளை விற்பனை செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வருமானம் ஜூலை – செப்டம்பர் காலாண்டில் 376 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. போன வருடம் இதே காலாண்டில் வங்கி 148 கோடியை வருமானமாக கொண்டிருந்தது. சற்றேறக்குறைய இரு மடங்கு லாபம்.