வாரத்தின் கடைசி வர்த்தக நாளான வெள்ளிக்கிழமை இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் நிறைவடைந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 874 புள்ளிகள் சரிந்து 59 ஆயிரத்து 330 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியிலும் 287 புள்ளிகள் சரிந்து 17 ஆயிரத்து 604 புள்ளிகளாக வர்த்தகம் முடிந்தது. அதானி நிறுவன பங்குகளும்,பாரத ஸ்டேட் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கிகளின் பங்குகளும் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளன. டாடா மோட்டார்ஸ்,பஜாஜ் ஆட்டோ,ஐடிசி உள்ளிட்ட நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டன. பொதுத்துறை வங்கிகள்,எண்ணெய் மற்றும் எரிவாயு,மின்சார ஆற்றல் மற்றும் உலோகத்துறை பங்குகள் 4 முதல் 6 விழுக்காடு வரை சரிவை சந்தித்தன. அமெரிக்காவில் நிலவும் பொருளாதார சிக்கல் மற்றும் வட்டி விகிதங்களை உயர்த்துவதற்கான கூட்டம் நடந்ததால் அமெரிக்க சந்தையில் சரிவு காணப்பட்டது. இதன் விளைவாகவே இந்திய பங்குச்சந்தைகளும் ஆட்டம் கண்டன. வேலை இழக்கும் அபாயம் அமெரிக்காவில் அதிகரித்துள்ளதால் பலரும் தங்கள் முதலீடுகளை சந்தைக்கு கொண்டுவராமல் காத்திருந்தனர். ஹிண்டன்பர்க் நிறுவன அறிக்கையால் அதானி குழும பங்குகள் சரிந்தது குறிப்பிடத்தக்கது.