அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக கடன்களுக்கான வட்டி விகிதம் கணிசமாக உயர்ந்து வந்தது. இந்த சூழலில்அடுத்ததாக மேலும் சில அடிப்படை புள்ளிகளை உயர்த்த அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி திட்டமிட்டது.ஆனால் அண்மையில் வெளியான பணவீக்கம் மற்றும் பணப்புழக்கத்தின் விகிதம் அதிகரித்துள்ளது.இதன் காரணமாக உலகளாவிய பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டுள்ளன. அமெரிக்க பங்குச்சந்தைகள் உயர்ந்து வரும் காரணத்தால் இந்தியாவில் மும்பை பங்குச்சந்தை ஆயரம் புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்து வணிகம் சிறப்பாக நடந்தது.பெடரல் ரிசர்வ் வங்கி கையில் எடுத்த கடன் விகிதம் உயரும் விகிதம் நல்ல பலன் தந்துள்ளதால் மேலும் கடன்வட்டி விகிதத்தை உயர்த்தும் முடிவை பெடரல் ரிசர்வ் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் மிகப்பெரிய லாபத்தை பதிவு செய்துள்ளன..விப்ரோ நிறுவன பங்குகள் 2.78 விழுக்காடு உயர்ந்துள்ளது.நிஃப்டி ஐடி துறை பங்குகளும் கணிசமாக உயர்ந்துள்ளது, தேசிய பங்குச்சந்தையிலும் நல்ல உயர்வு காணப்பட்ட ,நிலையில், அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள சாதகமான சூழல் காரணமாக இந்தியா மட்டுமின்றி உலகளாவிய பங்குச்சந்தைகள் ஏற்றத்தை கண்டுள்ளன.