ஐக்கிய அரபு அமீரகத்தை அடிப்படையாக கொண்டு இயங்கி வருகிறது . லூலூ குழுமம், யூசுப் அலி என்பவர் இந்த குழுமத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் இந்தியாவிலேயே மிகப்பெரிய ஷாப்பிங் மாலை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கட்ட உள்ளது. இதற்காக 3,000 கோடி ரூபாயை முதலீடு செய்கிறது. அதிநவீன வசதிகள் கொண்ட வகையில் புதிய மால் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான கட்டுமானப்பணிகள் அடுத்தாண்டு தொடங்க உள்ளன. ஏற்கனவே லூலூ மால் இந்தியாவில் கொச்சி மற்றும் லக்னவில் இரண்டு ஷாப்பிங் மால்களை கட்டியுள்ளது. இந்த இரண்டு மால்கள் வாயிலாக நேரடியாக 6 ஆயிரம் மற்றும் மறைமுகமாக 12 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். அகமதாபாத்தில் ஷாப்பிங் மால் கட்டுவதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாகவும் லூலூ நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய மாலில் 300 கடைகள்,3ஆயிரம் பேர் அமர்ந்து சாப்பிடும் ஃபுட் கோர்ட் ஐமேக்ஸ் உட்பட 15 திரையரங்குகள் அமைய உள்ளன.
வருகிறது இந்தியாவின் மிகப்பெரிய மால்!!!
Date: