எகிப்து மற்றும் துருக்கியால் திருப்பி அனுப்பப்பட்ட இந்திய ‘துரம் கோதுமை’ தற்போது இஸ்ரேலிய துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது என்று அரசாங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
எகிப்து மற்றும் துருக்கியின் முக்கிய உணவுப் பொருள் கோதுமையாகும், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ’துரம் கோதுமை’யின் புரத சத்து 14 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது என்று துருக்கி நிராகரித்தது. எனினும் சோதனைக்காக எந்த மாதிரியும் எடுக்காமல் கப்பலை திருப்பி விட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஐடிசி நிறுவனமானது 56,000 டன் கோதுமையை ஏற்றுமதி செய்துள்ளது. பொதுவாக தனியார் ஏற்றுமதிகளில் அரசாங்கம் தலையிடுவதில்லை. அது இந்திய கோதுமை என்பதால் அரசு இதில் தலையிடுகிறது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
மே 13 அன்று கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே ஏற்றுமதி இந்தியாவை விட்டு வெளியேறியது.
ரஷ்யா-உக்ரைன் போரின் காரணமாக சர்வதேச அளவில் கோதுமையின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. எனவே இந்த ஏற்றுமதியின் மதிப்பு மில்லியன் கணக்கில் இருக்கலாம். ஏனெனில் சர்வதேச சந்தையில் கோதுமை விலை டன் ஒன்றுக்கு 450-480 டாலர்கள் என இருக்கிறது என்று நுகர்வோர் விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எனினும் பிஜேபி செய்தித் தொடர்பாளரின் கருத்துக்களால் மேற்கு ஆசியாவில் நிராகரிப்புக்கும் கோபத்திற்கும் உள்ள தொடர்பை அதிகாரிகள் மறுக்கின்றனர். “சவூதி அரேபியாவுடனான எங்கள் உறவுகள் சிறந்தவை அல்ல, ஆனால் நாங்கள் எண்ணெய் வாங்குகிறோம். அரசியல் பிரச்சினைகளுக்கும் வர்த்தகத்திற்கும் சிறிதும் சம்பந்தமில்லை” என்று அதிகாரி மேலும் கூறினார்.
மேலும், கோதுமை ஒரு அழிந்துபோகக்கூடிய பொருள் அல்ல, அது பல மாதங்களாக இந்தியாவில் சேமிக்கப்படுகிறது என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.
கடந்த வாரம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், துருக்கியின் நிராகரிப்புக்கான காரணத்தை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகக் கூறினார்.