இந்தியாவின் பங்காளி நாடான பாகிஸ்தானில் மனிதர்கள் உயிர் வாழவே கடுமையான சிக்கல் நிலவும் அளவுக்கு எல்லா பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள் விழி பிதுங்கியுள்ளனர். ஆனாலும் எல்லா நாடுகளைப்போலவே பாகிஸ்தானிலும் வசதி படைத்தவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த நிலையில் பாகிஸ்தானில் உற்பத்தியை நிறுத்துவதாக ஹோண்டா கார் நிறுவனம் தெரிவித்துள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கே தடுமாறும் சூழலில் கார்களை வாங்க பலரும் ஆர்வம் காட்டவில்லை. விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டதால் ஹோண்டா ஆலையை மூடுவதாக அறிவித்துள்ளது. நாட்டின் பொருளாதார நிலை மிகவும் மோசமாக உள்ளதாக கூறியுள்ள ஹோண்டா நிறுவனம், தனது ஆலையை மார்ச் 9 முதல் 31ம் தேதி வரை மூடுவதாக கூறியுள்ளது. உற்பத்தி செலவு, மூலப்பொருட்களுக்கு பணம் தரமுடியாத சூழலும் முக்கிய காரணிகளாக ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே அந்த நாட்டில் உள்ள பாகிஸ்தான் சுசுக்கி நிறுவனமும்,இண்டஸ் மோட்டர்ஸ் நிறுவனமும் டொயோட்டா நிறுவனத்துக்கு சப்ளை செய்து வருகின்றன. அவர்களும் இதேபோல் நிறுவன ஆலைகளை மூடுவதாக அறிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவியை எதிர்நோக்கியுள்ள பாகிஸ்தான், அந்நாட்டில் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் பல துறைகளின் விலையை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்த்தியுள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் தடுமாறி வருகின்றனர்.
அநியாயத்துக்கு செலவாகுது..கார் கம்பெனியே வேணாம்டா ஐயா… !!!!
Date: