உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு கிவி ஷூ பாலிஷ் ஏற்றுமதி செய்யப்படுகிறது.பெரும்பாலான மக்கள் கிவி ஒரு நியூசிலாந்து நிறுவனம் என்றே கருதி வருகின்றனர்.ஆனால் உண்மையில் அது ஒரு ஆஸ்திரேலிய நிறுவனமாகும். மெல்போர்னில் 1906ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சின்னஞ்சிறு நிறுவனம், வியாபாரிகள், பிரபலங்கள் வரை மிகவும் பிரபலமானதாகும். முதலாம் உலகப்போரின்போது பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் இந்த நிறுவனம் மிகவும் பிரபலமாக இருந்தது . 183 நாடுகளில் இந்த ஷூ கம்பெனி 1980ம் ஆண்டுகளில் இருந்தது பிரிட்டனில் அதிகரித்த கொரோனா காரணமாக பலரும் தங்கள் ஷூக்களை தொடுவதே இல்லை என்பதால் ஷூ பாலிஷ் வாங்கவே இல்லை , இதனால் பிரிட்டனில் கிவி ஷூ பாலிஷ் விற்பனை கணிசமாக சரிந்தது. இதனால் இனி பிரிட்டனில் கிவி ஷூ பாலிஷ் கிடைக்காத சூழல் உள்ளது.