புதிதாக நிறைய சம்பாதிப்பது மட்டும் திறமையல்ல..இருப்பதை மேலும் வளர்க்க எப்படி முதலீடு செய்ய வேண்டும் என்பதும் ஒரு தனி கலைதான். இந்த கலையில் பலரும் பின்தங்கியுள்ளனர் என்பது தான் நிதர்சனமாக உள்ளது. இதனை மெய்ப்பிக்கும் வகையில் அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு அமைந்துள்ளது. ஆக்சிஸ் மை இந்தியா என்ற அமைப்பு மக்களின் சேமிப்புத்திறன் குறித்து கருத்துக்கணிப்பை நடத்தியது.கிராமப்புறங்களில் 70 விழுக்காடும், நகரங்களில் 30 விழுக்காடும் என மொத்தம் 10 ஆயிரத்து 19 பேரிடம் கருத்துகளை கேட்டுள்ளனர். அதில் 2023ம் ஆண்டில் முதலீடு செய்ய மொத்தம் 16% மக்கள் மட்டுமே விருப்பம் தெரிவித்துள்ளனர். பங்குச்சந்தைகளில் நிலையற்ற சூழல், நாட்டில் கடன்கள் மீதான வட்டி உயர்வு உள்ளிட்டவை மக்கள் முதலீடுகள் பக்கம் திரும்பாமல் இருக்க முக்கிய காரணங்களாக உள்ளன. உலகின் பலநாடுகளிலும் அதிகரிக்கும் விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கம் இந்த காரணிகளில் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. பலருக்கும் வேலை போய்விடும் என்ற அச்சம் உள்ளதும் பிரதான காரணமாக உள்ளது. எந்த விஷயத்துக்காக மக்கள் அதிகம் பணத்தை சேர்த்து வைக்கவும், கடன் வாங்கவும் செய்கின்றனர் என்ற பட்டியலையும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் 34% மக்கள் தங்கள் பிள்ளைகளின் கல்விக்காகத்தான் கடன் வாங்குவதாக தெரிவித்துள்ளனர். கல்யாணத்துக்கு நகை சேர்க்கவும், பணம் செலவிடவும் பணத்தை சேமித்து வைப்பதாக 14% மக்கள் விரும்புகின்றனர். வீடு வாங்கவும், அவசர தேவைக்கு என 8% மக்கள் பணத்தை சேமிக்கின்றனர் என்கிறது அந்த புள்ளி விவரம். இந்த வருடம் பணத்தை சேமிப்பதா என்ன செய்வது என்று எந்த திட்டமும் செய்யவில்லை என்று 27% பேர் தெரிவித்துள்ளனர். சேமிக்கும் கொஞ்சம் பேரிலும் 40%மக்கள் பரஸ்பர நிதி,காப்பீடு மற்றும் தங்கத்தில் முதலீடு செய்துள்ளனர்.நாட்டில் 16விழுக்காடு மக்கள் தங்கள் முதலீட்டை ரியல் எஸ்டேட் துறையில் செய்ய விரும்புகின்றனர். ரசிக்க வைக்கும் வகையில் 9 விழுக்காடு மக்கள் புத்தாண்டில் சேமிப்பை தங்கள் முக்கிய கொள்கையாக கொண்டுள்ளனர் என்கிறது அந்த புள்ளி விவரம்
இவ்ளோ கம்மியா??? என்னங்க சொல்றீங்க…!!!
Date: