ஓடமும் ஒருநாள் கப்பலில் ஏறும், கப்பலும் ஒருநாள் ஓடத்தில் ஏறும் என்பார்கள். அதே பாணியில்தான் அம்பானி குடும்பத்திலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. நீங்கள் கேட்டது சரிதான். திருபாய் அம்பானியின் இரண்டாவது மகனான அனில் அம்பானி ஒரு காலத்தில் ரிலையன்ஸ் செல்போன்களை கொண்டுவந்து சந்தையில் புரட்சிகளை செய்து வந்தார். ஆனால் சரியான திட்டமிடல் இல்லாமலும், அளவுக்கு அதிகமான கடன்களை வாங்கிகுவிந்ததும் அனில் அம்பானியின் சாம்ராஜ்ஜியம் சரிய முக்கிய காரணிகளாக நிபுணர்கள் கருதுகின்றனர். இந்நிலையில் ரிலையன்ஸ் கேப்பிட்டல் என்ற நிதி நிர்வாகம்செய்யும் நிறுவனத்தை மொத்தமாக விற்கும் பணிகள் விறுவிறுப்பு அடைந்துள்ளன. முதல்கட்டமாக அகமதாபாத்தைச் சேர்ந்த டொரொண்ட் குழும நிறுவனம், ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனத்தை 8 ஆயிரத்து 640 கோடி ரூபாய்க்கு வாங்குவதாக முதல்கட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. இதற்கு அடுத்தகட்டமாக இந்துஜா குழுமம் வாங்க ஆர்வம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. அடுத்த ஒவ்வொரு கட்ட ஏலத்திலும் ஆயிரம் கோடி ரூபாய் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஜனவரி 31ம்தேதிக்குள் ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனம் குறித்த இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது. பெரிய அளவில் கடன் வாங்கி திவாலான ரிலாயன்ஸ் கேப்பிடல் நிறுவனம் முற்றிலும் கைவிரித்த நிலையில், ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனத்தை ரிசர்வ் வங்கி கையில் எடுத்து அந்த நிறுவனத்தை மொத்தமாக வேறொரு நபருக்கு விற்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் விளைவாகவே ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனம் ஏலத்துக்கு வருகிறது.
ஜாம்பவானாக திகழ்ந்தவருக்கு இந்த நிலைமையா?
Date: