உலகளவில் பொருளாதார மந்த நிலை ஏற்கனவே தொடங்கிவிட்டது.இதன்காரணமாக பல்வேறு துறை பொருட்கள் விற்கப்படாமல் கிடக்கிறது. குறிப்பாக நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் உலகளவில் கணினி மற்றும் லேப்டாப்களின் விற்பனை கிட்டத்தட்ட 20% குறைந்துள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில்,கணினி விற்பனை வீழ்ந்திருப்பது இதுவே முதல்முறை என்கிறது கார்ட்னர் என்ற ஆய்வு நிறுவனம்.
கடந்த 2 ஆண்டுகளாக மக்கள் வீடுகளில் இருந்தே படித்தும்,பணியாற்றியும் வந்த நிலையில், தற்போது மெல்ல மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பியுள்ளதும் கணினி பயன்பாடு குறைய காரணம் என மற்றொரு ஆய்வு நிறுவனம் தெரிவிக்கிறது.
உற்பத்தியை குறைக்கும் நடவடிக்கைகளில் சில நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதால் முன்னணி சிப் தயாரிக்கும் நிறுவனங்களான இன்டெல் மற்றும் ஏஎம்டி ஆகியன கலக்கத்தில் உள்ளன.
2023ம் ஆண்டு இரண்டாவது பிற்பகுதியில்தான் கணினி சந்தை மீண்டெழ வாய்ப்புள்ளதாகவும் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
சந்தையில் மிகப்பெரிய இடத்தை பிடித்து வைத்துள்ள லெனோவா நிறுவனமும் நடப்பாண்டில் 15%சரிவை சந்தித்துள்ளது.
இதேபோல் ஹெச்பி நிறுவனத்தின் பங்குகளும்,விற்பனையும் 28%வரை சரிந்துள்ளன.