இந்தியா மட்டுமின்றி உலகளவில் பிரபலமான நிறுவனமாக திகழ்கிறது மைக்ரோசாஃப்ட் நிறுவனம்
இந்த நிறுவனம் உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் உள்ள தங்கள் அலுவலகங்களில் இருந்து ஆயிரம் பேரை
பணியில் இருந்து நீக்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மொத்தம் 1 லட்சத்து 80 ஆயிரம் பேர் பணியாற்றும் இந்நிறுவனத்தில் 1 விழுக்காடுக்கும் குறைவானவர்களைத்தான்
வேலையை விட்டு நீக்கியுள்ளோம் என்று மைக்ரோசாஃப்ட் அறிவித்துள்ளது.
உலகின் முன்னணி நிறுவனங்களான டிவிட்டர் மற்றும் மெட்டா நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களில் குறிப்பிடத்
தகுந்த அளவு பணியாளர்களை பணியில் இருந்து நீக்கியுள்ள நிலையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனமும்
தங்கள் பணியாளர்களை நீக்கியுள்ளது. கடந்த ஜூலை மாதத்திற்கு பிறகு அமெரிக்காவில் உள்ள பெரிய நிறுவனங்களில் இதுவரை சுமார் 32 ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக புள்ளி விவரம் வெளியிடப்பட்டுள்ளது
ஆட்குறைப்பு செய்யும் ஐ.டி நிறுவனங்கள்!!!
Date: