புளூம்பர்க் நிறுவனம் அண்மையில் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் உலகில் மிகப்பெரிய 500 பணக்காரர்கள் இந்த ஓராண்டில் மட்டும் 1.4 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை இழந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் டிவிட்டரின் புதிய முதலாளி எலான் மஸ்க், மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க்,ஜெஃப் பெசாஸ் என உலகின் முன்னணி ஆளுமைகளின் பெயர்களும் இடம்பிடித்துள்ளன. இதில் அதிகபட்சமாக மெட்டா நிறுவனர் ஜூக்கர்பர்க்கின் சொத்து மதிப்பு 65% சரிந்துள்ளது. மஸ்கின் சொத்து மதிப்பு 51% சரிந்திருக்கிறது. எலான் மஸ்க்கின் பங்குகள் சரிவுக்கு டிவிட்டரை வாங்கியதே பிரதான காரணமாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால் மெட்டா நிறுவன சரிவுதான் உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோடிகளில் சொத்து வைத்திருப்பவர்களையே அசைத்துப்பார்த்த முக்கிய காரணிகளையும் புளூம்பர்க் பட்டியலிட்டுள்ளது. அதில் கொரோனா பாதிப்பு, ரஷ்யா உக்ரைன் போர், அமெரிக்க பெடரல் ரிசர்வின் கடன்களுக்கான வட்டிவிகிதம் உயர்வு உள்ளிட்ட காரணிகள் முக்கிய இடம்பிடித்துள்ளன
பணக்காரர்களையும் அசைத்துப் பார்த்தது உண்மை தான்!!!
Date: