ரஷ்யா -உக்ரைன் போர் தொடங்கியது முதல் ஐரோப்பிய கரன்சியான யூரோவை பயன்படுத்தும் 19 நாடுகளில் இயற்கை எரிவாயு விலை கட்டுக்கு அடங்காமல் உயர்ந்து வருகிறது. அக்டோபர் மாதத்தில் மட்டும் விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கத்தின் அளவு 10.7 %ஆக உள்ளது. செப்டம்பர் மாதத்தில் இந்த அளவு 9.9% ஆக இருந்தது. யூரோ பயன்படுத்தும் நாடுகளில் கடந்த 1997 ம் ஆண்டுக்கு பிறகு இதுவே அதிகபட்சமாகும். உக்ரைன், ரஷ்யாவில் இருந்து மலிவு விலையில் கிடைத்து வந்த இயற்கை எரிவாயு தற்போது அமெரிக்கா மற்றும் கத்தாரில் இருந்து அதிக விலை கொடுத்து வாங்க
வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இயற்கை எரிவாயு இறக்குமதி அதிகரித்துள்ளதால் ஸ்டீல், உரம் உள்ளிட்ட சில பொருட்களின் விலை விண்ணை முட்டியுள்ளது. அந்நாட்டில் அடுத்தாண்டு பணவீக்கம் தற்போது இருப்பதை விட 5.8% அதிகரிக்கும் என்று ஐரோப்பிய மத்திய வங்கி கணித்துள்ளது. ஐரோப்பவை மட்டுமில்லாமல் சர்வதேச நாடுகளை பாதிக்கும் மிகமுக்கிய பிரச்னையாக பணவீக்க உயர்வு மாறியுள்ளது. பிரான்சில் 7.1%ஆக உள்ள பணவீக்கம் , நெதர்லாந்தில் 16.8%ஆக உயர்ந்துள்ளது இருப்பதிலேயே அதிகபட்சமாக எஸ்டோனியாவில் 22.4%,லாத்வியாவில் 21.8% மற்றும் லித்துவேனியாவில் 22% பண வீக்கம் உயர்ந்துள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு பொருளாதாரம் மீண்டு வருகிறது. இரண்டாவது காலாண்டில் 0.8%ஆக இருந்த வளர்ச்சி அதற்கு அடுத்த காலாண்டில் 0.2%ஆக சரிந்துள்ளது. சில நாடுகளின் கடுமையான வரி விதிப்பு முறைகள் மேலும் சிக்கலை அதிகரிக்கிறதே தவிர குறைக்கவில்லை என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.
இது எல்லாத்தையும் ஆட்டிப்படைக்குது !!!!
Date: