இந்தியாவில் செயல்பட்டு வரும் Huawei-க்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இந்தியாவில் Huawei:
சீனாவை சேர்ந்த மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் Huawei. இது மொபைல் ஃபோன், டிவி உள்ளிட்ட பல்வேறு சாதனங்களை உற்பத்தி செய்து வருகிறது. Huawei நிறுவனம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் செயல்பட்டு வருகிறது.
வரி ஏய்ப்பில்Huawei:
இந்நிலையில், ஹுவாவே நிறுவனம் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் செய்த வர்த்தக பரிவர்த்தனைகளில் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்துள்ளது.
இதன் அடிப்படையில் டெல்லி, ஹரியானா மாநிலம் குர்கான் மற்றும் பெங்களுருவில் உள்ள Huaweiக்கு சொந்தமான அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, நிதி ஆவணங்கள் , வங்கி கணக்கு புத்தகங்கள், மற்றும் நிறுவனத்தின் பதிவுகளை கைப்பற்றியும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இவற்றில் குற்றம் நடந்ததற்கான முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறை யினர்பறிமுதல் செய்துள்ளனர்.
நூற்றுக்கணக்கான கோடி மதிப்புள்ள கணக்கில் காட்டப்படாத பணம் மற்றும் பல நிதி ஆண்டுகளாக நிறுவனம் TDS ஐத் தாக்கல் செய்யத் தவறியது போன்ற காரணங்களால் வருமான வரித் துறை ஆகஸ்ட் 2021 இல் சீன டெலிகாம் தயாரிப்பாளரான ZTE கார்ப் மீது இதேபோன்ற சோதனைகளை நடத்தியது
சீன மொபைல் கைபேசி தயாரிப்பாளர்களான Oppo மற்றும் Xiaomi ஆகியவையும் வரி அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் உள்ளன. தொலைத்தொடர்பு மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறையில் செயல்படும் சீன நிறுவனங்களின் வருமானம் மற்றும் பிற சந்தேகத்திற்குரிய நிதி பரிவர்த்தனைகளை இது கவனித்து வருகிறது.