உலகளவில் நிலவும் நிலையற்ற சூழல் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் அண்மையில் வீழ்ந்து வந்தன. ஆனால் இந்த மாதம் தொடக்கத்தில் அதிகபட்ச வளர்ச்சியை காட்டிய இந்திய பங்குச்சந்தைகள் திடீரென பள்ளத்தில் விழுந்தன.இதனை எப்படி புரிந்துகொள்வதெனில், ரியல் எஸ்டேட் துறை பங்குகள் பெரிய அளவில் வளரவில்லை என்பதே உண்மையான சூழலாக உள்ளது. தொழில்நுட்பத்துறையில் பெருந்தொற்று காலகட்டத்தில் சிறப்பாக இயங்கினாலும் அடுத்தடுத்த பாதிப்புகள் துறையை அசைத்து பார்த்தன, பெருந்தொற்று முடிந்து மீண்டும் மக்கள் இயல்புநிலைக்கு திரும்பியபோது வியாபாரம் செய்ய போதுமான பணம் இல்லாமல் போனதால் தொழில்நுட்பத்துறை பங்குகள் ஆட்டம் கண்டது உண்மைதான். வாடிக்கையாளர்கள் அன்றாடும் பயன்படுத்தும் துறையும் பெரிய அளவில் முன்னேற்றம் இன்றியே காணப்படுகிறது.பல முன்னணி நிறுவனங்களும் தங்கள் பொருட்களை வாடிக்கையாளர்கள் தலையில் கட்ட படாதபாடுபடுகின்றனர் என்கிறார்கள் நிபுணர்கள் நிலைமை இப்படி இருக்க,ஆற்றல் மற்றும் உள்கட்டமைப்பு மேம்படுத்துதல் சார்ந்த துறைகள் அசுர வளர்ச்சியை பெற்று வருகின்றன. மத்திய அரசு இந்த துறைகளுக்கு தனி கவனம் செலுத்தி வருவதால் இந்த துறை சார்ந்த பங்குச்சந்தை முதலீடுகள் கவனம் ஈர்த்துள்ளன. இறுதியாக ஆட்டோமொபைல் துறைகளின் நிலையை பற்றியும் கவனிக்க வேண்டியுள்ளது. இந்த துறை பங்குகள் நல்ல வளர்ச்சி கண்டுள்ளன. புதிது புதிதாக சந்தையில் வரும் கார்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் கொரோனாவுக்கு பிறகு இந்த துறை புத்துயிர் பெற்றுள்ளது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.