3-வது காலாண்டில், Life Insurance Corporation Of India-வின் நிகர லாபம் ரூ.234.91 கோடியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் எல்ஐசியின் ஐபிஓக்கள் விற்பனைக்கு வரவுள்ளது. இதற்காக விண்ணப்பித்த 22 நாட்களிலேயே LIC-க்கு பங்கு பரிவர்த்தனை ஒழுங்குமுறை ஆணையமான செபி அனுமதி அளித்துள்ளது.
இந்த நிலையில், நடப்பு நிதியாண்டின் அக்டோபர் முதல் டிசம்வரையிலான 3-வது காலாண்டின் நிகர லாபம் மூ.234.91 கோடியாக கிடைத்துள்ளதாக LIC தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் எல்ஐசியின் லாபம் ரூ.1,642.87 கோடியாக அதிகரித்துள்ளதாகவும், முதல் 6 மாதங்களில் ரூ.1,437 கோடி எல்ஐசிக்கு லாபம் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், பிரீமியம் செலுத்தும் வளர்ச்சியும் 554 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும், இது கடந்த நிதியாண்டில் 394 சதவீதமாகவே இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.