நடப்பு நிதியாண்டின் மார்ச் 31-ம் தேதி வரை LIC IPO-க்கள் வெளியிடப்பட வாய்ப்பில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
பங்குகளை விற்கும் LIC:
இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான Life Insurance Corporation Of India(LIC) 5 சதவிகித பொதுப்பங்குகளை (IPO) விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது. பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய நிதிநிலை அறிக்கையில், விரைவில். LIC-யின் பொதுப்பங்குகள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. பிப்ரவரி 14-ம் தேதி, LIC IPO-வுக்கான வரைவு அறிக்கை பிப்ரவரி 14-ம் தேதி, பங்குச் சந்தை காப்பீட்டு வாரியமான SEBI-யிடம் தாக்கல் செய்யப்பட்டது. எல்ஐசி விண்ணப்பித்த 22 நாட்களிலேயே செபி அனுமதி வழங்கியுள்ளது. இதனிடையே, உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக எல்ஐசி ஐபிஓக்கள் விற்பனை தள்ளி போயுள்ளது.
விரைவில் இறுதி ஆவணம் தாக்கல்:
LIC IPO-க்கள் விற்பனை குறித்த இறுதி ஆவணங்களை மத்திய அரசு விரைவில் தாக்கல் செய்ய உள்ளதாகவும், இது தொடர்பான டிஆர்ஹெச்பி ஒப்புதல் கிடைத்து விட்டது. அடுத்து ஆர்ஹெச்பி தாக்கல் செய்யவுள்ளோம். பங்குச் சந்தையின் சூழல்களை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். தக்க நேரம் வரும்போது பங்கு விற்பனை குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன.
தள்ளி போகும் ஐபிஓ விற்பனை:
இந்நிலையில், உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக நாள்தோறும் பங்குச் சந்தையில் ஏற்ற..இறக்கங்கள் காணப்படுகிறது. இதனால், எல்ஐசி ஐபிஓக்கள் விற்பனை மார்ச் 31-ம் தேதி வரை நடைபெற வாய்ப்பு இல்லை என்றும், ஆனால், மே 12-ம் தேதி வரை அரசுக்கு அவகாசம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தள்ளாடும் பங்குச் சந்தை காரணமாக எல்ஐசி ஐபிஓக்கள் விற்பனையை மத்திய அரசு தள்ளிப் போடும் என்றே தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.