இண்டஸ்இண்ட் வங்கியில் தனது பங்குகளை உயர்த்திக் கொள்ள LIC, இந்திய ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெற்றிருக்கிறது, வங்கியின் செய்திக்குறிப்பொன்றில் இது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தம் ஒரு வருட காலத்துக்கு மட்டுமே அமலில் இருக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து இண்டஸ்இண்ட் வங்கியின் பங்குகள் சந்தையில் 1 சதவிகிதம் அதிகரித்து 961 ரூபாய்க்கு வர்த்தகமாகியது, இண்டஸ்இண்ட்டின் மொத்த பங்கு மூலதனமான 9.99 சதவீதத்தில் 4.95 சதவீத மூலதனப் பங்கை LIC நிறுவனம் தன் வசம் வைத்துள்ளது.