டோக்கியோ ஒலிம்பிக்ஸில் பளு தூக்குதலில் (Weightlifting) வெள்ளிப்பதக்கம் வென்று மணிப்பூரை சேர்ந்த மீராபாய் சானு இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார். வெண்கலம் வென்ற பின் மீராபாய் தனக்கு பீட்சா சாப்பிட வேண்டும் என்று ஒரு டீவீட்டை போட்டார். இதற்கு பதிலளித்த டோமினோஸ் பீட்சா மீராபாய்க்கு அவரது வாழ்நாள் முழுவதும் இலவச பீட்சாவை அளிப்பதாக கூறியிருக்கிறது.
டோமினோஸ் மீராபாய்க்கு பீட்சாவை மட்டும் வழங்கவில்லை; அவர்கள் இருவருமே ஒரு வணிக ஒப்பந்தத்திற்கு வந்துள்ளனர். அதன்படி மீராபாய் பிராண்ட் டாமினோசை அவரது ட்விட்டர் போன்ற சமூகத்தளங்களில் விளம்பரப்படுத்துவார். மீராபாய்க்கு டிவிட்டரில் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பாலோவர்ஸ் இருக்கிறார்கள்.
பலரும் டோமினோஸ் மீராபாய்க்கு இலவச பீட்சா அளித்ததை ஒரு விளம்பரத்துக்கான செயலாகவே கருதினர். இதனால் எப்படி மீராபாய் பயனடைவார் என்ற கேள்வி எழுந்தது. அதற்கு பதிலளித்த டாமினோஸில் வேலை பார்க்கும் ஒருவர் எகனாமிக் டைம்ஸ்சிடம் கூறுகையில், “ஒரு விளையாட்டு வீராங்கனையாக, மீரா பீட்ஸாவுடனான வழக்கமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட விரும்பவில்லை, ஏனெனில் அது ஆரோக்கியமானதாக இருக்காது. ஆனால், இது ஒரு வழக்கமான வணிக ஒப்பந்தமாக இல்லையென்றாலும் கூட மீராவுடனான இந்தக் கூட்டணியால் டொமினோஸ் உறுதியாகப் பயனடையும்.”
நமது நாட்டில் கிரிக்கெட் அல்லாத வீரர்களுக்கு இத்தகைய வணிக வாய்ப்புகள் மிகக் குறைவு. வல்லுனர்கள் இவ்வாறு சாதாரண நிலையில் இருந்து வரும் வீரர்களுக்கு பிராண்ட்கள் ஊக்கமளிக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.