ஒருவர் ஒரு நிறுவனத்தில் முழுநேர பணியாளராக பணியாற்றிக் கொண்டிருக்கும் போது,அவரின் ஓய்வு நேரத்தில் மற்றொரு வேலையை வேறொரு நிறுவனத்துக்கு செய்து தருவதன் பெயர் மூன்லைட்டிங். இது சரியா தவறா என பலதரப்பினரும் விவாதித்து வரும் சூழலில், பிரபல டிரேடிங் இணையதளத்தின் இணை நிறுவனரான நிகில் காமத் இது பற்றி கருத்து தெரிவித்துள்ளார். வருங்காலங்களில் ஒரே நபர் பலவேலைகளை செய்ய வேண்டிய சூழல் உருவாகும் அளவுக்கு பொருளாதாரம் வளர்ந்து வருகிறது என்றார். ஆனால் பணியாற்றும் ஊழியர்களுக்கும்-நிறுவனங்களுக்கும் இடையே வெளிப்படைத்தன்மை வேண்டும் என்றும் நிகில் தெரிவித்துள்ளார். மூன்லைட்டிங் பெரிய பிரச்சனை இல்லை என்று கூறியுள்ள நிகில் , ஒரு வேலையை மற்றொரு வேலை பாதிக்காத அளவுக்கு பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த மூன்லைட்டிங்கிற்கு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மூன்லைட்டிங் தவறு என 1946-ம் ஆண்டு வகுக்கப்பட்ட சட்டத்தை சுட்டிக்காட்டி நாடாளுமன்றத்தில் தொழிலாளர் நலத்துறை இணையமைச்சர் ரமேஷ்வர் டெலி பேசியுள்ளார். மூன்லைட்டிங் செய்த காரணத்துக்காக விப்ரோ நிறுவனம் 300 பேரை பணிநீக்கம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்போசிஸ் நிறுவனமோ மூன்லைட்டிங் என்ற வார்த்தையையே குறிப்பிடாமல் ஒரு மேலோட்டமான விதிகளையே வகுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மூன்லைட்டிங் தப்பில்ல ஆனா இது அவசியம்…!!!!
Date: