Ficci மற்றும் இந்திய வங்கி கூட்டமைப்பு இணைந்து அண்மையில் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தின . அதில், வங்கிகள் வசூலிக்க வேண்டிய கடன்கள் வாராக்கடன் ஆக வாய்ப்பு அதிகம் உள்ளதாக எச்சரிக்க பட்டுள்ளது. குறிப்பாக சிறு, குறு நிறுவனங்கள், விமானத்துறை, சுற்றுலா துறைக்கும் பாதிப்பு அதிகம் உள்ளது கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.
ஜனவரி முதல் ஜூன் வரை இந்த கருத்துகள் கேட்க பட்டன .பல வங்கிகளின் சொத்து மதிப்பு உயர்ந்தாலும் .வாராக்கடனும் உயர்வதால் அடுத்த கட்ட நடவடிக்கை தேவை என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. டிசம்பர் 2022 வரை வாராக்கடங்கள் 8% க்கு குறைவாக இருக்கும் என்று ஒரு தரப்பும். விமானத் துறையில் 50 வரை இருக்கலாம் என மற்றும் ஒரு தரப்பு தெரிவிக்கின்றனர். பொருளாதார சீர்திருத்தங்கள் ஒரு பகுதியாக கோவிட் நிலையில் ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்டன நிலையில் தற்போது வாராக்கடன் அதிகரிப்பு, குறித்த புள்ளி விவரம் வங்கிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது