உலகப் பெரும்பணக்காரர் என்ற கெத்தான அடைமொழியுடன் வலம் வந்தவர் எலான் மஸ்க், இவர் அண்மையில் டிவிட்டர் நிறுவனத்தை பெரிய தொகை கொடுத்து தன்வசப்படுத்திக்கொண்டார். இந்த நிலையில் உலகிலேயே அதிக பணம் வைத்துள்ள பணக்காரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் நிறுவனம் அண்மையில் வெளியிட்டது, அதில் மஸ்க் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டார். இந்த சூழலில் புளூம்பர்க் பில்லியனர்ஸ் இன்டக்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையிலும் மஸ்க் தனது முதல் இடத்தை இழந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 51 வயதாகும் மஸ்க்,தற்போது சொத்து மதிப்பாக 168.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வைத்துள்ளார். இந்த பட்டியலில் சொகுசு பொருட்கள் தயாரிக்கும் லூயிஸ் உய்ட்டன் நிறுவனத்தை உருவாக்கிய பெர்னார்டு அர்னால்டுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. இவரின் சொத்துமதிப்பு 172.9பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கிறது. இவர் அண்மையில்தான் 185 மற்றும் 190 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்பை வைத்துக்கொண்டு, மஸ்குடன் முதல் இடத்துக்கு போட்டி போட்டுக்கொண்டிருந்தார். கைவசம் வைத்திருந்த தொகையில் 44 பில்லியன் டாலர் பணத்தை வைத்துதான் டிவிட்டரை எலான் மஸ்க் வாங்கியதால், தவறில்லை ஆனால் டிவிட்டரை தொட்டுதான் முதலிடத்தை தவறவிட்டுள்ளார் மஸ்க். 51 வயதான மஸ்க்கின் சொத்து மதிப்பு கடந்தாண்டு நவம்பரில் இதுவரை இல்லாத அளவாக 351 பில்லியன் டாலராக இருந்தது உலகையே மிரள வைத்திருந்தது. டிவிட்டருக்கு அதிக முக்கியத்துவம் தந்து வரும் மஸ்க், டெஸ்லாவை கவனிப்பதில்லை என்று தகவல் கசிந்தள்ளதால் முதலீட்டாளர்ரக்ள் மத்தியில் கலக்கம் இருக்கிறது.ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனக்களை விடவும் டிவிட்டரின் பகக்ம் மஸ்க் அதிதீவிரம் காட்டி வருவது சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.