தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மக்கள் புதிய வருமான வரித்துறை போர்ட்டலைப் (www.incometax.gov.in) பற்றி நீண்ட காலமாக புகார் செய்து வருகின்றனர். இப்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சில நாட்களில் இந்த பிரச்னை சரி செய்யப்படும் என்று கூறி இருக்கிறார். மேலும் இணையதளத்தை உருவாக்கிய இன்போசிஸை நிறுவனத்திற்கு இது குறித்துத் தொடர்ந்து நினைவு படுத்தி வருவதாகக் கூறினார். சில நாட்களில் பிரச்சனைகள் தீரும் என்று இன்போசிஸ் தலைவர் நந்தன் நிலேக்கனி உறுதியளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
ஜூன் மாதத்தில் இருந்ததை விட போர்ட்டல் இப்போது மெருகேறி உள்ளது என்று சீத்தராமன் கூறியுள்ளார், ஆனால் இன்னும் சில சிக்கல்கள் உள்ளன என்று ஒப்புக்கொண்டுள்ள அவர், வருவாய் செயலாளர் (revenue secretary) வாராந்திர அடிப்படையில் இந்த பிரச்சினையை கண்காணித்து வருவதாகவும் என்று அவர் மேலும் கூறினார்.
2019 ல் இன்போசிஸ் நிறுவனத்திற்கு வருமான வரி தாக்கல் செய்யும் முறையை, 63 நாட்களில் இருந்து ஒரு நாளாக குறைக்கவும், பணத்தைத் சுலபமாக திரும்பப்பெறவும் ஏற்றவகையில் வருமானவரித்துறை போரட்டலை வடிவமைக்க ஒரு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. போர்ட்டலை மேம்படுத்துவதற்காக அரசு ஜனவரி 2019 முதல் ஜூன் 2021 வரை இன்போசிஸுக்கு இதுவரை ₹164.5 கோடியை வழங்கியுள்ளது.
ஜூன் 22 அன்று, சீதாராமன் போர்ட்டலில் உள்ள பிரச்சினைகளை ஆய்வு செய்ய இன்போசிஸின் முக்கிய அதிகாரிகளுடன் ஒரு சந்திப்பை நடத்தினார். கூட்டத்தில், Institute of Chartered Accountants of India வின் உறுப்பினர்கள், போர்ட்டலில் வரி செலுத்துவோர் மற்றும் வரி வல்லுநர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எடுத்துக்கூறினர்.