அடுத்த ஆண்டிலிருந்து கிரிப்டோ கரன்சி எனப்படும் டிஜிட்டல் நாணயத்துக்கும் கட்டாயம் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என வருவாய்த்துறை செயலாளர் தருண் பஜாஜ் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 1 முதல் கிரிப்டோ கரன்சிக்கு வரி:
வரும் ஏப்ரல் 1ந் தேதி முதல் கிரிப்டோ கரன்சியால் வந்த வருமானத்திற்கு 30 சதவிகிதம் வரியும், செஸ் மற்றும் சர்சார்ஜ்ஜூம் செலுத்த வேண்டும் என்றும், அதற்காக ஒரு ’காலம்’ உருவாக்கப்படும் என்றும், அரசாங்கம் கிரிப்டோவை முறைப்படுத்துவதற்காக செயல்முறையில் தீவிரமாக இறங்கியுள்ளதாக தருண் பஜாஜ் கூறியுள்ளார்.
வருவாய்த்துறை செயலாளர் தருண் பஜாஜ் தகவல்:
மத்திய ரிசர்வ் வங்கியின் உதவியோடு அரசாங்கம் விரைவில் இந்த மெய்நிகர் எண்ம பணத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும். அத்துடன் அவை பிளாக் செயின் தொழில்நுட்பத்துன் இருக்கும் என்றும், மக்களுக்கு கிரிப்டோ குறைந்த விலையில் கிடைக்கும் எனவும் வருவாய்த்துறை செயலாளர் தருண் பஜாஜ் தெரிவித்துள்ளார்.
கிரிப்டோகரன்சிகள் மீதான லாபங்கள் எப்போதும் வரி விதிப்புக்கு உட்பட்டவைதான். பட்ஜெட்டில் முன்மொழிந்திருப்பது புதிய வரி அல்ல என்று அவர் தெரிவித்தார்.
கிரிப்டோகரன்சி மீது வரும் வருமானத்துக்கு வரி விதிக்க வேண்டும் என்பதில் அரசு தெளிவாக இருந்தது. எனவே நாங்கள் அதிகபட்ச விதி விகிதத்தை கொண்டுவந்துள்ளோம். உரிய மேல்கட்டணத்துடன் (சர்சார்ஜ்), 30 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று கூறினார்.
தற்போதும் சிலர் கிரிப்டோகரன்சி மீதான ஆதாயங்களை காட்டி வரி செலுத்துகிறார்கள். டி.டி.எஸ். முறையின் கீழ் இப்போது கொண்டுவந்துவிட்டதால், ஒவ்வொரு பரிமாற்றமும் தானாகவே வருமான வரித்துறைக்கு வந்து விடும் என்று வருவாய்த்துறை செயலாளர் தருண் பஜாஜ் கூறினார்.