Follow on public offer முறையில் 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை திரட்ட அதானி குழுமம் அண்மையில் அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இதற்குள் அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க் அதானி குழுமம் பற்றி பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. இதனால் பல லட்சம் கோடி ரூபாய் பங்குகள் அதானி குழுமத்துக்கு இழப்பாகின.இந்த நிலையில் ஏற்கனவே அறிவித்த FPOவின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்று அதானி குழுமம் தெரிவித்துள்ளது. FPO வெளியீட்டில் மாற்றம் இருக்கலாம் என்று தகவல் பரவிய நிலையில் அதில் எந்த மாற்றங்களையும் தங்கள் நிறுவனம் செய்யவில்லை என்று அதானி குழுமம் விளக்கியுள்ளது. கடந்த 27ம் தேதி முதல் வரும் 31ம் தேதி வரை அதானி குழுமத்தின் FPO இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதானி குழும FPO பங்குகளை முதலீட்டாளர்கள் சலுகை விலையில் வாங்கிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 27ம் தேதி வெளியிடப்பட்ட FPO 1% மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. தங்கள் நிறுவனம் எந்த தவறையும் செய்யவில்லை என்று முதலீட்டாளர்களுக்கு அதானி குழுமம் நம்பிக்கை தெரிவித்துள்ளதை அடுத்து திங்கட்கிழமை அதானி குழும Fpo பங்குகள் அதிகம் விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தடைகள் வந்தா என்ன, எங்க விலையில் மாற்றமில்லை : அதானி குழுமம்
Date: