இந்தியாவின் கிழக்கு கடற்கரை ஓரங்களில் திரவ வடிவிலான இயற்கை எரிவாயுவை எடுக்கும் பணிகளை அதானி குழுமத்தில் உள்ள அதானி டோட்டல் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. ஏப்ரல் மாதத்தில் இந்த பணிகள் துவங்கப்படலாம் என்றும் ,இதற்கான உபகரணங்கள் கிடைத்த அடுத்த 30 முதல் 45 நாட்களுக்குள் பணிகள் விறுவிறுப்பாக நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு ஆண்டுக்கு 50 லட்சம் டன் திரவ வடிவிலான இயற்கை எரிவாயு எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பரிலேயே இதற்கான பணிகள் துவங்கியிருக்க வேண்டும். இயற்கை எரிவாயுவை தற்போதுள்ள எரிபொருளுடன் 15% கலக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. தற்போது வரை அது 6% மட்டுமே கலக்கப்படுகிறது. அதானியும் பிரான்சை சேர்ந்த ஆற்றல் நிறுவனமான டோட்டலும் இணைந்து இதற்கான பணிகளை செய்கின்றனர். இந்தியாவில் தற்போது வரை திரவ இயற்கை எரிவாயு இறக்குமதிதான் செய்யப்படுகிறது. கடந்த 8 மாதங்களாக இதன் இறக்குமதி தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது.
எவன் என்ன சொன்னாலும், வேலை நிற்க கூடாது!!! அதானி ஸ்டைல்!!
Date: