அரும்பாடு பட்டு சேர்த்த பணத்தை நடுத்தர மக்கள்சேமித்து வைப்பதற்குள் போதும்போதும் என்றாகிவிடுகிறது.இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் வரை பொதுத்துறை வங்கிகளில் உரிமை கோராமல் சுமார் 35 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் தொகை இருந்துள்ளது. இதனை ரிசர்வ் வங்கியின் கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இந்த தொகை கடந்த 10 ஆண்டுகளாக அப்படியே கிடந்துள்ளது. 10 கோடியே 24 லட்சம் பேர் தங்கள் பணத்தை எதையும் செய்யாமல் சாதாரணமாக டெபாசிட் செய்து எடுக்காமலேயே இருந்துள்ளனர். எவ்வளவு தொகை இன்னும் இந்த வகையில் இருப்பு உள்ளது என்ற கேள்விக்கு நாடாளுமன்றத்தில் நிதித்துறை இணையமைச்சர் பாக்வத் கராட் எழுத்துப் பூர்வமாக இதனை தெரிவித்துள்ளார். இந்த தொகையில் ஸ்டேட் வங்கியில்தான் அதிகபட்சமாக அதாவது 8ஆயிரத்து 86 கோடி ரூபாய் கிடப்பில் கிடப்பதாகவும், இதற்கு அடுத்தபடியாக பஞ்சாப் நேஷனல் வங்கியில் 5,340 கோடி ரூபாயும்,கனரா மற்றும் பாங்க் ஆப் பரோடாவில் முறையே 4558 மற்றும் 3904 கோடி ரூபாய் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. கணக்கு வைத்திருந்தவர் இறந்திருக்கும்பட்சத்தில் அந்த தொகையை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் பணிகளில் ஸ்டேட் வங்கி ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த பரிவர்த்தனையும் நடக்காமல் உள்ள வங்கி வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் உரியவர்களை அழைத்து பணத்தை தர ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு கேள்விக்கு பதிலளித்த மத்திய இணையமைச்சர் கராட், 2 பொதுத்துறை வங்களையும்,ஒரு அரசு காப்பீட்டு நிறுவனத்தையும் தனியார் மயப்படுத்தும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது என்று கூறியுள்ளார்.
இவ்ளோ பணத்துக்கு யாரும் உரிமை கோரவே இல்லையாமே…
Date: