முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை மீண்டும் அலுவலகத்துக்கு அழைத்து வரும் நிலையில், தாங்கள் அப்படி யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என்று இன்போசிஸ் நிறுவன சிஇஓ சலீல் பாரெக் தெரிவித்துள்ளார்.
45 ஆயிரம் பேர் பணியில் உள்ள நிலையில் புதிதாக 40 ஆயிரம் பேரை எடுத்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்போசிஸ் நிறுவனம் தனது நிறுவன ஊழியர்களுக்கு தகுந்தபடி திட்டங்களை மாற்றிக்கொள்ளும் என்று கூறிய அவர்,
தங்களுக்கு பணி அளிக்கும் கிளைண்ட்டின் தேவைக்கு ஏற்ப அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று தெரிவித்தார்.
இத்தகைய இலகுவான அனுகுமுறையால் கடந்த சில மாதங்களாக இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து வெளியேறும் பணியாளர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது.
இது ஒரு புறம் இருக்க, மூன்லைட்டிங் செய்வதற்கு மட்டும் அந்த நிறுவனம் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்தபடி உள்ளது. அலுவலகத்துக்கு இத்தனை நாட்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தாத நிலையில், அளிக்கும் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது என்பதே இன்போசிஸ் நிறுவனத்தின் நிலைப்பாடாக உள்ளது
பணியில் இருந்து வெளியே செல்வோரின் அளவு 27.1விழுக்காடாக இன்போசிஸ் நிறுவனத்தில் உள்ளது. மேலும் வரும் நாட்களில் இந்த அளவும் மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஃபீசுக்கு வந்தே ஆகணும்னு கட்டாயப்படுத்தவில்லை: இன்போசிஸ்
Date: