பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநில முதலமைச்சராக உள்ள பகவாந்த்சிங் மான் அண்மையில் ஜெர்மனி சென்றுள்ளார். அங்கு பிஎம்டபிள்யு நிறுவன அதிகாரிகளை சந்தித்ததாகவும், பஞ்சாபில் உற்பத்தி ஆலை அமைக்க அந்த நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியானது ஆனால் அதனை பிஎம்டபிள்யூ நிறுவனம் மறுத்துள்ளது.
பிஎம் டபிள்யூ நிறுவனத்துக்கு நாட்டிலேயே சென்னையில் மட்டும்தான் உற்பத்தி ஆலை உள்ளது. உதிரி பாகங்களுக்கான கிடங்கு புனேவில் அமைந்துள்ளது.
மாநில முதலமைச்சர் தனியார் பயணத்திற்காக ஜெர்மனி சென்றிருப்பதாகவும், பொறுப்புள்ள பதவியில் இருந்துகொண்டு அவர் இவ்வாறு போலியான தகவல்களை வெளியிடலாமா என்றும் எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர்.
பகவாந்த் சிங் மான் இந்த விவகாரத்தில் உண்மை நிலையை விளக்க வேண்டும் என்று பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.