சில மாநிலங்கள் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாக கூறி வருகின்றன. இது தேசிய அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சுப்பாராவ் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதில் பழைய ஓய்வூதிய திட்டத்தின்படி அரசு ஊழியர்கள் தாங்கள் கடைசியாக வாங்கும் சம்பளத்தின் 50விழுக்காட்டை பென்ஷனாக பெறுவது வழக்கம். பழைய ஓய்வூதிய திட்டத்தை கடந்த தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி 2003ம் ஆண்டு கைவிட்டது. புதிய ஓய்வூதிய திட்டத்தின்படி சம்பளத்தில் 10விழுக்காடு ஊழியர் தனது பென்ஷனுக்கு சேமிக்க முடியும், அரசு ஊழியர்களுக்கு 14விழுக்காடு சம்பளம் பிடித்தம் செய்யப்படும். ஏற்கனவே பணி பாதுகாப்பு அதிகம் உள்ள அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தப்படும் போது அது சரியாக இருக்காது என்றும் சுப்பாராவ் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த இருப்பதாக மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளன.
“பழைய ஓய்வூதிய திட்டம் பலருக்கு பாதகமாகும்”
Date: