ஹோட்டல்களில் தங்கும் முறையையே எளிமையாக தலைகீழாக மாற்றிய ஓயோ நிறுவனம்,தனது வணிகத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் ஆரம்ப பங்கு வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. வரும் தீபாவளி பண்டிகை சமயத்தில் ஆரம்ப பங்கு வெளியீடு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பணிகளை தற்போதே ஓயோ நிறுவனம் செய்து வருகிறது.செபியின் ஒப்புதல் கிடைத்த 18 மாதங்களுக்குள் எப்போது விருப்பமோ அப்போது பங்குகளை வெளியிட்டுக்கொள்ள இயலும். 2024ம் நிதியாண்டில் EBIDTa 800 கோடி ரூபாயாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது அந்த நிறுவனத்தில் நிதி பேலன்சாக 2 ஆயிரத்து 700 கோடி ரூபாய் உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பரில் 8 ஆயிரத்து 430 கோடி ரூபாய்கான ஆரம்ப பங்கு வெளியீட்டுக்கான பணிகளில் ஓயோ ஈடுபட்டது.தற்போது இந்த நிறுவனம் பங்குகளை வெளியிட திட்டமிட்டு வருகிறது.
ஆரம்ப பங்கு வெளியீட்டுக்கு தயாராகும் ஓயோ..
Date: