சோமாட்டோவின் பங்குச் சந்தை பட்டியல் (Market Listing) “லாபமீட்டாத ஆனால் வளர்ந்து வரும் துவக்க நிலை நிறுவனங்களுக்கு வழி காட்டுகிறது. ஆனால், இதே போன்ற வெற்றியை எல்லா நிறுவனங்களும் எதிர்பார்க்க முடியாது” என்று ஜெரோதா ப்ரோக்கிங் லிமிடெட் இன் CEO நிதின் காமத் கூறியுள்ளார்.
“நஷ்டமடைந்த சூழலில் பட்டியிலடப்பட்ட முதல் நிறுவனமான சோமாட்டோ பெற்ற வெற்றிகரமான நட்சத்திர அறிமுகமானது வேகமாக வளர்ந்து வருகிற, ஆனால் இன்னும் லாபமீட்டாத மற்ற நிறுவனங்களுக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறது, அவை அனைத்தும் சந்தைகளில் தங்களைப் பட்டியலிடுவதில் உற்சாகமாக இருக்கின்றன” என்று காமத் கூறினார்.
“ஆன்லைன் உணவு ஆர்டர் நிறுவனங்களில் இரண்டே நிறுவனங்கள், அதிக வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய முடிகிற பெரிய சந்தை மற்றும் பங்குச் சந்தையின் அதீத மதிப்பீடுகள் காரணமாக Zomato வால் உயர் மதிப்பீட்டில் பட்டியலிட முடிந்தது” என்று காமத் கூறுகிறார்.
“அதிக போட்டி உள்ள ஆனால் சந்தையில் வாய்ப்புகள் அதிகமில்லாத துறைகள் உள்ளன. இது போன்ற துறைகளைச் சேர்ந்த துவக்க நிலை நிறுவனங்கள் (start-ups) அனைத்தும் சோமாடோ அளவுக்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற முடியும் என்று எதிர்பார்க்கின்றனவா? என்று எனக்குத் தெரியவில்லை,” என்று அவர் மேலும் கூறினார்.
2021 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில், Ant Group- ஆதரவு பெற்ற PayTM மற்றும் Soft Bank- ஆதரவு பெற்ற பாலிசி பஜார் போன்ற நிறுவனங்கள் நிதி திரட்டுவதற்காக சந்தைகளைத் நோக்கி நகர்கின்றன. PayTM ₹16,600 கோடி வரையிலும், பாலிசி பஜார் ₹6,018 கோடி வரையிலும் நிதி திரட்டத் திட்டமிட்டுள்ளன.
“PayTM அதிக அளவில் போட்டிகள் நிறைந்த சந்தையில் உள்ளது. இது ஒரு பெரிய இலக்கு சந்தைதான், ஆனால் இது ஒரு போட்டிகள் நிறைந்த சந்தை,” என்று அவர் கூறினார். பாலிசி பஜார் அதன் பிரிவில் முன்னணியில் உள்ளது, அதற்கு நெருக்கமான போட்டியாளர் இல்லை, எனவே தன்னுடைய பிரிவில் ஒரு பெரிய தலைமையிடத்தில் இருப்பதால், அவர்களால் நிறைய மதிப்பீட்டு பிரீமியம் திரட்ட முடியும்.”
காமத் ஒரு ஜெரோதா – IPO வுக்கான திட்டங்களை நிராகரித்தார். “அதிர்ஷ்டவசமாக, எங்களுக்கான நிதியை நாங்களே திரட்டினோம். நாங்கள் வெளியிலிருந்து எந்த மூலதனத்தையும் திரட்டவில்லை. அதனால் எந்த வெளிப்புற முதலீட்டாளருக்கும் நிறுவனத்தில் இருந்து வெளியேற எந்த அழுத்தமும் இல்லை, மேலும் எங்களால் லாபமும் ஈட்ட முடிகிறது” என்று அவர் கூறினார். “வியாபாரத்தை வேகமாக வளர்த்தெடுக்க பணம் தேவையில்லை,” என்று மேலும் கூறினார்.
Credits: Bloomberg Quint